💡 பிரதமர் மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை… பொங்கல் வாழ்த்து தெரிவித்த தலைவர்கள் | ஆன்மிகம்

✍️ |
mk stalin 29 2025 09 0be2c8d938445af6067c8b4f6e52f339 3x2 Thedalweb பிரதமர் மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை... பொங்கல் வாழ்த்து தெரிவித்த தலைவர்கள் | ஆன்மிகம்
📌 Last Updated:Jan 15, 2026 1:03 PM ISTநமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பொங்கல் திருநாள் பிரதிபலிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மோடி – ஸ்டாலின்பொங்கல் திருநாளில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…


Last Updated:

நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பொங்கல் திருநாள் பிரதிபலிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மோடி - ஸ்டாலின்
மோடி – ஸ்டாலின்

பொங்கல் திருநாளில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

பொங்கல் பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மக்களை ஒன்றிணைத்து நம் சமூகத்தில் அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகையைக் காண்பது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மரியாதையையும் இந்த திருநாள் நினைவூட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பொங்கல், உங்கள் இலக்குகளை நிறைவேற்ற புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும் எனவும் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், நலமும் கிடைக்க பிரார்த்திப்பதாகவும் பிரதமர் வாழ்த்தி உள்ளார்.

புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் தமிழர் திருநாளில் தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி உள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் மகிழ்ச்சிப் பொங்கல், திராவிட மாடல் 2.0வில் பன்மடங்காகும், வெல்வோம் ஒன்றாக என தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும் என தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்