"பிரியா சச்சிதேவுடன் நெருக்கமாக இருந்தது எனக்கு தெரியும்" - தொழிலதிபர் சஞ்சய் கபூர் குறித்து அவரது சகோதரி மந்திரா கபூர் | Businessman Sanjay Kapoor's sister Mandira Kapoor on his relationship

“பிரியா சச்சிதேவுடன் நெருக்கமாக இருந்தது எனக்கு தெரியும்” – தொழிலதிபர் சஞ்சய் கபூர் குறித்து அவரது சகோதரி மந்திரா கபூர் | Businessman Sanjay Kapoor’s sister Mandira Kapoor on his relationship


அந்நேரம் கரிஷ்மா கபூரும், எனது சகோதரனும் நன்றாக இருந்தனர். அந்நேரம் கியான் பிறந்திருந்தான். குழந்தைகள் மீது எனது சகோதரன் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தான். ஒரு குழந்தை பெற்ற பெண்ணைப் பற்றி இன்னொரு பெண் கவலைப்படாமல் இருப்பது மோசமான ரசனை என்று நான் நினைக்கிறேன்.

ஒரு குடும்பத்தைச் சீர்குலைப்பது மோசமான ரசனை. நீங்கள் ஒரு மகிழ்ச்சியான திருமண உறவைப் பிரிக்கக் கூடாது. அல்லது அதற்கான வேலையில் ஈடுபடக்கூடாது. கரிஷ்மா கபூரின் திருமண வாழ்க்கையை பிரியாதான் அழித்தார்.

பிரியாவுடனான எனது சகோதரனின் உறவுக்கு எனது தந்தை உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தோம். எனது தந்தை ஒட்டுமொத்தமாக அவர்களது உறவை எதிர்த்தார்.

பிரியாவுடன் சஞ்சய் கபூர்

பிரியாவுடன் சஞ்சய் கபூர்

பிரியாவைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும், பிரியாவின் முகத்தில் விழிக்க விரும்பவில்லை என்றும், இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்றும் எனது தந்தை தெரிவித்தார்.

யாரும் அவர்கள் இரண்டு பேருக்கும் ஆதரவாக இல்லை. நான் எனது சகோதரன் மீதுள்ள அன்பு காரணமாக அவர்களுக்கு ஆதரவு கொடுத்தேன். என்னைப் பொறுத்தவரை கரிஷ்மாவிற்கு குழந்தைகள் இருக்கின்றன. அவருக்கு அனைத்தும் இருப்பதால் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று நினைத்தேன்.

2017ம் ஆண்டு பிரியா மற்றும் எனது சகோதரனின் திருமணத்திற்குக்கூட நானும், எனது சகோதரியும் செல்லவில்லை. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று எனது தந்தை தெரிவித்ததால் நாங்கள் அத்திருமணத்திற்குச் செல்லவில்லை. கரிஷ்மாவின் கஷ்டமான நேரத்தில் அவருடன் இல்லாமல் போனது வருத்தமாகத்தான் இருக்கிறது.

உண்மையில் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. இதனால் அவர் என் மீது அதிருப்தியில் இருக்கலாம் என்று நினைக்கிறேன். இதற்காக நான் அவரைக் குறைசொல்லமாட்டேன்.

அவர் எனது சிறந்த தோழி. அவருக்குத் துணையாக இருக்காமல் போனது குறித்து நான் மிகவும் மோசமான உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *