📌 பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை திருவிழா… பக்தர்கள் புடைசூழ பவனி வந்த தேர்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5736956 cropped 31012026 144514 inshot 20260131 144451706 1 Thedalweb பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை திருவிழா... பக்தர்கள் புடைசூழ பவனி வந்த தேர்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Jan 31, 2026 6:29 PM ISTபூதப்பாண்டி பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பூதலிங்க சுவாமி கோவில் தை திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.+ பூதப்பாண்டி கோவில் தேரோட்டம் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில்…


Last Updated:

பூதப்பாண்டி பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பூதலிங்க சுவாமி கோவில் தை திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

பூதப்பாண்டி

பூதப்பாண்டி கோவில் தேரோட்டம் 

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பூதலிங்க சுவாமி – சிவகாமி அம்பாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் தை திருவிழா, இந்த ஆண்டு கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பக்தி முழக்கத்துடன் தொடங்கியது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 9-ம் நாள் தேரோட்டம், இன்று அதிகாலை முதல் பக்தி மற்றும் ஆன்மிக உணர்வுகளுடன் நடைபெற்றது. சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு திருத்தேர்களில் விநாயகர் மற்றும் பூதலிங்க சுவாமி எழுந்தருளி, நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மங்கள வாத்தியங்கள், நாதஸ்வரம், தவில் முழக்கம், வேத பாராயணம் ஆகியவற்றுடன் தொடங்கிய தேரோட்டத்தில், “ஓம் நமசிவாய”, “ஹர ஹர மகாதேவா” என்ற பக்தி கோஷங்கள் விண்ணதிரும் அளவிற்கு எழுந்தன. பக்தர்கள் மலர்கள் தூவி, தேங்காய் உடைத்து, தீப ஆராதனை செய்து சுவாமியை வழிபட்டனர்.

தேரோட்ட நிகழ்வை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். அவருடன் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், நாகர்கோவில் மேயர் மகேஷ், தமிழ்நாடு உணவு கழக தலைவர் சுரேஷ் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களுடன் இணைந்து பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காலை தொடங்கிய தேரோட்டம், கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து, மதியம் கோவில் முன்புறம் தேர் நிலைகொண்டது. இந்த நிகழ்வை காண பூதப்பாண்டி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தை திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பக்தி மணம் கமழ, அன்னதானம், நீர்மோர் வழங்கல், சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் ஆகியவை நடைபெற்றன. பக்தர்கள் குடும்பத்துடன் வந்து விரதம் இருந்து சுவாமியை வழிபட்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

திருவிழா அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருவிழாவின் தொடர்ச்சியாக, நாளை தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தால் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5731914 cropped 29012026 052355 image search 1769579622418 1 Thedalweb மகானுக்கு இந்துக்கள் கொடுக்கும் சந்தனம்... மத ஒற்றுமைக்கான காட்டுபாவா பள்ளிவாசல்...

⚡ மகானுக்கு இந்துக்கள் கொடுக்கும் சந்தனம்… மத ஒற்றுமைக்கான காட்டுபாவா பள்ளிவாசல்…

📌 இந்து மக்களால் போர்வை பெட்டிக்கு மரியாதை செய்து, பின்னர் மீண்டும் பள்ளிவாசல் கொண்டு வரப்பட்டு, மகானுக்கு போர்த்தப்படுவது…

HYP 5736920 panchamirthampreparationathome 7 Thedalweb Panchamirtham: தைப்பூசம் வந்தாச்சு… முருகன் விரும்பும் பஞ்சாமிர்தம் - வீட்டிலே ஈஸியா செய்யலாம்...

📌 Panchamirtham: தைப்பூசம் வந்தாச்சு… முருகன் விரும்பும் பஞ்சாமிர்தம் – வீட்டிலே ஈஸியா செய்யலாம்…

📌 தைப்பூச விழா அன்று முருகனுக்கு படைக்க நெய்வேத்தியமான பஞ்சாமிர்தம் வீட்டிலேயே தயார் செய்யலாம். Source link தைப்பூச…