மகாலட்சுமியின் அருள் பெற குத்து விளக்கு பூஜை.. ஏராளமான பெண்கள் பங்கேற்பு..! | சேலம்

✍️ |
HYP 5621654 cropped 05122025 181352 inshot 20251205 175813636 2 3x2 Thedalweb மகாலட்சுமியின் அருள் பெற குத்து விளக்கு பூஜை.. ஏராளமான பெண்கள் பங்கேற்பு..! | சேலம்


Last Updated:

எடப்பாடி தாவாந் தெரு ஸ்ரீ காளியம்மன் கோவிலில் ஓம் சக்தி வார வழிபாட்டு மகளிர் மன்றம் சார்பில் 38வது ஆண்டாவதாக குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

Rapid Read
+

கார்த்திகை

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை.

குத்துவிளக்கு பூஜை என்பது ஒளிவடிவ இறைவனை வழிபட்டு, வாழ்வில் மங்களம், செல்வம், ஞானம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி ஆகிய நன்மைகள் பெருக வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் சக்திவாய்ந்த வழிபாடாகும். இது பஞ்சபூதங்களின் சக்தியை ஈர்க்கவும், துன்பங்களை நீக்கி, நல்லொழுக்கங்களை மேம்படுத்தவும் உதவுகிறது.

இதன் காரணமாக, கோவில் தலங்களில் விளக்கு பூஜை வழிபாடு செய்து அதனை வீட்டு பூஜை அறையில் வைத்தால் நம் குடும்பம் மற்றும் சுற்றுப்புறத்தில் இருக்கும் இருளை அகற்றுவதோடு நம் மனதின் இருளை அகற்றி அவ்விளக்குடன் மகாலட்சுமியும் நம் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம். கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வருடா வருடம் சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந் தெரு ஸ்ரீ காளியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஓம் சக்தி வார வழிபாட்டு மகளிர் மன்றம் சார்பில் 38வது ஆண்டாவதாக கோவில் நிர்வாகத்தார் முன்னிலையில் 208 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் திருமணமான, திருமணம் ஆகாத ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த குத்து விளக்கு பூஜையில் கலந்துண்ட அனைவருக்கும் ஓம் சக்தி வார வழிபாட்டு மகளிர் மன்றம் சார்பாக மாங்கல்யம் மற்றும் பூஜை செலவுகள் வழங்கப்பட்டது. பின்னர் யாக பூஜை விளக்கு பூஜை மந்திரங்கள் பாடி ஸ்ரீ காளியம்மனுக்கு சிறப்பு பூஜை தீபாராதனை கட்டப்பட்டது. பெண்கள் அனைவரும் குத்துவிளக்கு பூஜை செய்து வழிபட்டு விட்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்