📌 மகா சிவராத்திரி மயூர நாட்டியாஞ்சலி… அமெரிக்காவிலிருந்து வந்த நடன கலைஞர்கள்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5764415 cropped 14022026 173845 120067526038919thumbnail16 2 Thedalweb மகா சிவராத்திரி மயூர நாட்டியாஞ்சலி... அமெரிக்காவிலிருந்து வந்த நடன கலைஞர்கள்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Feb 14, 2026 6:11 PM ISTமயிலாடுதுறை மயூரநாதர் கோயில் மயூர நாட்டியாஞ்சலியில் ஒவ்வொரு நாளும் அமெரிக்கா, லண்டன், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட பரத…


Last Updated:

மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் மயூர நாட்டியாஞ்சலியில் ஒவ்வொரு நாளும் அமெரிக்கா, லண்டன், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட பரத கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

நாட்டியாஞ்சலி

நாட்டியாஞ்சலி

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயில் உருவில் அம்பாள் சிவனை வழிபட்ட ஆலயமான ஸ்ரீ மயூரநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வருடந்தோறும் சிவராத்திரியை முன்னிட்டு மயூர நாட்டியாஞ்சலி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 20 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி கடந்த 12ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதி சிவராத்திரி வரை நான்கு நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் அமெரிக்கா, லண்டன், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட பரதகலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

நேற்று அமெரிக்காவின் சுமன் நாயக் நடேசா ஸ்கூல் ஆஃப் பரதநாட்டியம் மற்றும் பெங்களூரு, மும்பை, மயிலாடுதுறையைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களின் நடனத்தை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். நாட்டியம் அரங்கேற்றிய குரு மற்றும் மாணவிகளுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன.

இது குறித்து அமெரிக்கா நாட்டிய கலைஞர் கூறும்போது, “முதல்முறையாக தமிழ்நாட்டிற்கு வருகிறோம். ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கின்றது. இந்த சிவராத்திரியை முன்னிட்டு எங்கள் நடனத்தை அரங்கேற்றுவது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கின்றது.

இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மனதிற்கு ரொம்ப நெருக்கமாக இருக்கின்றது. நடராஜரின் அருளால் தான் நாங்கள் இப்போது இங்கு நடனம் ஆட இருக்கின்றோம். தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்ற அதிக நாள் கனவு இன்று நடந்து இருக்கு” என தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Weekly palan 1 2026 02 1712ef09c7c4bbb66b00333e536b3343 Thedalweb Biweekly Horoscope | பிப்., 15 முதல் 28 வரை.. சிவராத்திரிக்கு பிறகு இந்த 4 ராசிகளுக்கு எதிர்பாராத பணவரவு.. 12 ராசிக்குமான இருவார ராசிபலன் இதோ!

⚡ Biweekly Horoscope | பிப்., 15 முதல் 28 வரை.. சிவராத்திரிக்கு பிறகு இந்த 4 ராசிகளுக்கு எதிர்பாராத பணவரவு.. 12 ராசிக்குமான இருவார ராசிபலன் இதோ!

📌 Rasi palan | பிப்ரவரி 15 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என…

Weekly rasi palan 2026 02 bf54f9c6b2097f0101e24de76c6201c5 Thedalweb Weekly Rasi Palan | பிப்., 16 முதல் 22 வரை.. மகா சிவராத்திரிக்கு பிறகு அடிக்கப்போகுது ஜாக்பாட்.. கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ Weekly Rasi Palan | பிப்., 16 முதல் 22 வரை.. மகா சிவராத்திரிக்கு பிறகு அடிக்கப்போகுது ஜாக்பாட்.. கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேஷம்இந்த வாரம் மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை அனுபவிப்பர்…

HYP 5762128 cropped 13022026 152443 c4649023f5f41ce2c8c324570c 2 Thedalweb மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்... கன்னியாகுமரியில் கனரக வாகனங்களுக்கு தடை...

⚡ மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்… கன்னியாகுமரியில் கனரக வாகனங்களுக்கு தடை…

📌 கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு, கனிமவள டாரஸ் கனரக வாகனங்கள் இரண்டு நாட்களுக்கு மாவட்டத்திற்குள் நுழையத் தடை…