⚡ மலைக்கிராமத்தில் 3000 ஆண்டு பாரம்பரியம்… பூம்பாறை குழந்தை வேலப்பர் தேரோட்டம் தொடக்கம்… | Temples News (கோவில்கள் செய்திகள்)

✍️ |
HYP 5746236 cropped 05022026 134942 videocapture 2026020513455 2 Thedalweb மலைக்கிராமத்தில் 3000 ஆண்டு பாரம்பரியம்... பூம்பாறை குழந்தை வேலப்பர் தேரோட்டம் தொடக்கம்... | Temples News (கோவில்கள் செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 06, 2026 12:21 PM ISTகொடைக்கானல் பூம்பாறை மலைக்கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட விழா,பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்கியது…+ குழந்தை வேலப்பர் முருகன் கோவில் தேரோட்டம் தொடக்கம்திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை மலைக்கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த அருள்மிகு குழந்தை வேலப்பர் முருகன் கோவில் அமைந்துள்ளது

2
இந்தக் கோயில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலாக இயங்கி வருகிறது.இந்த கோவில் தேரோட்ட திருவிழாவிற்கு வெளிமாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருவார்கள்

3
குறிப்பாக இந்த தேரோட்ட விழாவானது 10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறுவது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 06, 2026 12:21 PM ISTகொடைக்கானல் பூம்பாறை மலைக்கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட விழா,பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்கியது…+ குழந்தை…


Last Updated:

கொடைக்கானல் பூம்பாறை மலைக்கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட விழா,பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்கியது…

+

குழந்தை

குழந்தை வேலப்பர் முருகன் கோவில் தேரோட்டம் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை மலைக்கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த அருள்மிகு குழந்தை வேலப்பர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலாக இயங்கி வருகிறது.

இந்த கோவில் தேரோட்ட திருவிழாவிற்கு வெளிமாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருவார்கள். குறிப்பாக இந்த தேரோட்ட விழாவானது 10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். மேலும் ஆசியா கண்டத்திலேயே மலைக்கிராமங்களில் இரண்டு வடம் பிடித்து தேரோட்டமும் கொடைக்கானல் பூம்பாறை மலைக் கிராமத்தில் நடைபெறுவதும் தனி சிறப்பாகும். இந்த நிலையில் அருள்மிகு குழந்தை வேலப்பர் முருகன் கோவிலில் தேரோட்ட விழா பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

இதனையடுத்து அடுத்து வரும் 10 நாட்கள் அன்ன வாகனம், மயில் வாகனம், காளை வாகனம், சிங்க வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் முருகன் கோவிலை சுற்றி இரவு நேரங்களில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் வியாழன் கிழமை(12.02.2026) அன்று திருத்தேர் தேரோட்ட விழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. இந்த திரு தேர் விழாவிற்கு கொடைக்கானல் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதனை தொடர்ந்து 13.02.2026 வெள்ளிக்கிழமை திருக்கொடி இறக்கமும் நடைபெற்று திருவிழா இனிதே நிறைவடையும். கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா கோஷங்களுடன் குழந்தை வேலப்பர் முருகனை தரிசனம் செய்தனர்.

கொடைக்கானல் செய்தியாளர் _ ஜாபர் சாதிக்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…