தேஜா சஜ்ஜா நடித்து வெற்றி பெற்ற ’ஹனுமான்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பிரசாந்த் வர்மா.
அவர் தனது ‘பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ மூலம் 5 படங்களை உருவாக்க இருப்பதாகக் கூறியிருந்தார். அதன்படி ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘ஜெய் ஹனுமான்’ என்றப் படத்தை இயக்கி வருகிறார். மேலும், மஹாகாளி, சிம்பா, ஆதிரா ஆகிய படங்களையும் அவர் உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில் அவருடைய யுனிவர்ஸின் 3-வது படமான ‘மஹாகாளி’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்துக்கான கதையை பிரசாந்த் வர்மா எழுதியுள்ளார். பூஜா அபர்ணா கொல்லூரு இயக்குகிறார். ஆர்கே துக்கல், ரிவாஸ் ரமேஷ் துக்கல் ஆகியோரின் ஆதரவுடன், ஆர்கேடி ஸ்டூடியோஸ் தயாரிக்
கிறது.
இதில் மஹாகாளியாக பூமி ஷெட்டி நடிக்கிறார். வித்தியாசமான அவர் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதையடுத்து பூமி ஷெட்டி சமூக வலைதளங்களில் டிரெண்டானார். கன்னட நடிகையான இவர், ‘இக்கட்’, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
‘மஹாகாளி’ படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

