⚡ மாசி அமாவாசை 2026.. குலத்தை காக்கும் குலதெய்வ வழிபாடு.. முக்கியத்துவம் என்ன? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Masi amavasai 2026 02 a5b1f138eebe3e5faf4e13ef87d86c35 Thedalweb மாசி அமாவாசை 2026.. குலத்தை காக்கும் குலதெய்வ வழிபாடு.. முக்கியத்துவம் என்ன? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 16, 2026 12:55 PM ISTMaha shivaratri | குலதெய்வத்தை வழிபட்டு சென்றால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.குலதெய்வ வழிபாடுசிவனுக்கு உகந்த நாளான மகாசிவராத்திரி நேற்று பிப்ரவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது

2
நேற்று இரவு முழுவதும் விழித்திருந்தால் நன்மை உண்டாகும், சிவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் பலரும் விடிய விடிய முழித்திருப்பார்கள்.மாதம்தோறும் சிவராத்திரி வந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை மாசி மாதத்தில் தேய்பிறை அன்று வரும் வரும் மகா சிவராத்திரி சிவபெருமானுக்கான முக்கிய விரத நாள் ஆகும்

3
சிவராத்திரி நாளில் சிவனுக்கு 4 கால பூஜை நடைபெறும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
முதல் காலம் இரவு 7.30 மணிக்கும், இரண்டாம் காலம் இரவு 10.30 மணிக்கும்,

📌 Last Updated:Feb 16, 2026 12:55 PM ISTMaha shivaratri | குலதெய்வத்தை வழிபட்டு சென்றால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.குலதெய்வ வழிபாடுசிவனுக்கு உகந்த நாளான மகாசிவராத்திரி நேற்று பிப்ரவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை…


Last Updated:

Maha shivaratri | குலதெய்வத்தை வழிபட்டு சென்றால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாடு

சிவனுக்கு உகந்த நாளான மகாசிவராத்திரி நேற்று பிப்ரவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. நேற்று இரவு முழுவதும் விழித்திருந்தால் நன்மை உண்டாகும், சிவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் பலரும் விடிய விடிய முழித்திருப்பார்கள்.

மாதம்தோறும் சிவராத்திரி வந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை மாசி மாதத்தில் தேய்பிறை அன்று வரும் வரும் மகா சிவராத்திரி சிவபெருமானுக்கான முக்கிய விரத நாள் ஆகும். சிவராத்திரி நாளில் சிவனுக்கு 4 கால பூஜை நடைபெறும். முதல் காலம் இரவு 7.30 மணிக்கும், இரண்டாம் காலம் இரவு 10.30 மணிக்கும், மூன்றாம் காலம் நள்ளிரவு 12 மணிக்கும், நான்காம் காலம் அதிகாலை 4.30 மணிக்கும் நடைபெறும்.

இந்த 4 பூஜைகளிலும் பங்கேற்று சிவனை மனமுருகி தரிசித்தால் அவரின் அருளை பெற்று உங்களின் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. கோயிலில் நடைபெறும் 4 கால பூஜைகளில் பங்கேற்கலாம் அல்லது உங்கள் வீட்டுகளிலேயே விளக்கேற்றி ஒவ்வொரு கால பூஜையையும் தொடங்கி சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்.

மகா சிவராத்திரி தினத்திற்கு மறுநாளான இன்று அமாவாசை தினமாகும். மாசி மாதத்தில் வரும் முதல் அமாவாசை மற்றும் திங்கள் அன்று வருவதால் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த நாளில் குலதெய்வ வழிபாடு வம்சத்தை தழைக்க செய்யும் என்பது ஐதீகம்.

குலதெய்வ வழிபாடு:

குலதெய்வத்தை வழிபடும் வழக்கம் இந்து மக்களிடையே பல நூற்றாண்டு காலமாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் குலதெய்வ வழிபாட்டு நாளாக மகா சிவராத்திரி நாள் கருதப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களில் ஏராளமான குடும்பத்துடன் வந்து குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது மிகவும் பிரசித்தி பெற்றது.

சிவராத்திரி அன்றும் அதன் மறுநாளும் பலர் அவரவர் சொந்த ஊர்களில் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இது சிவராத்திரி அன்று நடைபெறக்கூடிய ஒரு அதி விசேஷமான வழிபாடு. கிராமத்தில் உள்ள குலதெய்வத்தை வருடம் முழுவதும் அவ்வப்போது வழிபாட்டில் ஈடுபட்டு வந்தாலும், ஒரு நாள் மட்டும் அந்த கோவில் விசேஷமாக ஜெகஜோதியாக ஜொலிக்கும் அது என்று என்றால் சிவராத்திரி அன்று மட்டும்தான். அந்த கோவிலை வழிபடக்கூடியவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் எந்த ஊரில் இருந்தாலும் அன்றைய தினம் சொந்த ஊர்களுக்கு வருவதை மறப்பதில்லை. சிவராத்திரி அன்று குலதெய்வ கோவிலில் சாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, அபிஷேக ஆராதனைகள் செய்து குலதெய்வத்தை எப்படி கும்பிட வேண்டுமோ அப்படி கும்பிடுவது வழக்கம். இப்படி குலதெய்வ வழிபாட்டிற்கு மிக மிக சக்தி வாய்ந்த நாள் என்றால் அது வருடத்திற்கு ஒருமுறை வரும் மகா சிவராத்திரி மட்டுமே.

இந்த ஒரு நாள் குலதெய்வத்தை வழிபட்டால், வருடம் முழுவதும் தரிசனம் செய்ததற்கு சமம். அதேபோல் எங்கெல்லாம் அங்காளம்மன் திருக்கோவில் இருக்கிறதோ அங்கெல்லாம் சிவராத்திரி என்று மயான கொள்ளை நடைபெறுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கூப்பிட்டால் வருவது தெய்வம் கூப்பிடாமலே வருவது குலதெய்வம் என்பது பெரியவர்களால் கூறப்படும் பழமொழி அதன்படி எந்த ஒரு செயலை தொடங்கும் முன்பும் குலதெய்வத்தின் அருள் வேண்டும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5755883 cropped 10022026 145447 inshot 20260210 145427306 2 Thedalweb இந்தியாவைத் தாண்டி உலகை வென்ற விநாயகர்... பல உருவங்களில் போற்றப்படும் கணபதி...

✅ இந்தியாவைத் தாண்டி உலகை வென்ற விநாயகர்… பல உருவங்களில் போற்றப்படும் கணபதி…

📌 அங்கோர் வாட் போன்ற வரலாற்று தலங்களில் அவரது உருவங்கள் காணப்படுவது, தென்கிழக்கு ஆசியாவில் இந்து மரபின் ஆழமான…

AStrology 1 2026 02 941563e7bfcd2b2def53d3064c6d0495 Thedalweb Budhaditya Yogam | கும்பத்தில் உருவாகும் புதாதித்ய யோகம்.. தலைகீழாக மாறப்போகுது வாழ்க்கை.. 6 ராசிகளுக்கு பணமழை கொட்டும்!

⚡ Budhaditya Yogam | கும்பத்தில் உருவாகும் புதாதித்ய யோகம்.. தலைகீழாக மாறப்போகுது வாழ்க்கை.. 6 ராசிகளுக்கு பணமழை கொட்டும்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Astrology | கும்ப ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் 6…