✅ மாட்டு வண்டியில் தொடங்கிய பயணம்… மாஸ் காட்டும் தூத்துக்குடி கேரல்ஸ் உருவான பின்னணி… | ஆன்மிகம்

✍️ |
HYP 5654817 cropped 22122025 020536 images 9 22 watermark 2212 1 3x2 Thedalweb மாட்டு வண்டியில் தொடங்கிய பயணம்... மாஸ் காட்டும் தூத்துக்குடி கேரல்ஸ் உருவான பின்னணி... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இன்றுபோல் அனைவரும் ஒரே இடத்தில் கூடி, டிஜே இசையுடன் நகரம் முழுவதும் ஊர்வலமாகச் செல்லும் நிகழ்ச்சியாக இந்த கேரல்ஸ் கொண்டாட்டம் ஆரம்பிக்கவில்லை

2
1996ஆம் ஆண்டுக்கு முன்பே தூத்துக்குடியில் கேரல்ஸ் பாடும் மரபுதான் இருந்தது.அக்காலத்தில் லாரி, டெம்போ போன்ற வாகனங்களில் தீம் அடிப்படையில் அலங்காரம் செய்து கேரல்ஸ் பாடல்கள் பாடி சென்றனர்

3
ஆனால் அது இன்றுபோல் பிரம்மாண்ட அணிவகுப்பாக நடக்கும் விழாவாக இல்லாமல், சிறு சிறு குழுக்களாகவே நடைபெற்றது.இதுகுறித்து ‘Ols Carols’ குழுவைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “ஒவ்வொரு குழுவும் தனித்தனியாகச் சென்று, தெரு தெருவாக கேரல்ஸ் பாடி மகிழ்வோம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
எல்லோரும் ஒரே இடத்தில் கூடி டிஜே வைத்து நகரம் முழுவதும் செல்லும் பழக்கம் அப்போது இல்லை.1998ஆம் ஆண்டில் தான் ‘Ols Carols’ என்ற

📌 இன்றுபோல் அனைவரும் ஒரே இடத்தில் கூடி, டிஜே இசையுடன் நகரம் முழுவதும் ஊர்வலமாகச் செல்லும் நிகழ்ச்சியாக இந்த கேரல்ஸ் கொண்டாட்டம் ஆரம்பிக்கவில்லை. 1996ஆம் ஆண்டுக்கு முன்பே தூத்துக்குடியில் கேரல்ஸ் பாடும் மரபுதான் இருந்தது.அக்காலத்தில் லாரி, டெம்போ போன்ற…


இன்றுபோல் அனைவரும் ஒரே இடத்தில் கூடி, டிஜே இசையுடன் நகரம் முழுவதும் ஊர்வலமாகச் செல்லும் நிகழ்ச்சியாக இந்த கேரல்ஸ் கொண்டாட்டம் ஆரம்பிக்கவில்லை. 1996ஆம் ஆண்டுக்கு முன்பே தூத்துக்குடியில் கேரல்ஸ் பாடும் மரபுதான் இருந்தது.

அக்காலத்தில் லாரி, டெம்போ போன்ற வாகனங்களில் தீம் அடிப்படையில் அலங்காரம் செய்து கேரல்ஸ் பாடல்கள் பாடி சென்றனர். ஆனால் அது இன்றுபோல் பிரம்மாண்ட அணிவகுப்பாக நடக்கும் விழாவாக இல்லாமல், சிறு சிறு குழுக்களாகவே நடைபெற்றது.

இதுகுறித்து ‘Ols Carols’ குழுவைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “ஒவ்வொரு குழுவும் தனித்தனியாகச் சென்று, தெரு தெருவாக கேரல்ஸ் பாடி மகிழ்வோம். எல்லோரும் ஒரே இடத்தில் கூடி டிஜே வைத்து நகரம் முழுவதும் செல்லும் பழக்கம் அப்போது இல்லை.

1998ஆம் ஆண்டில் தான் ‘Ols Carols’ என்ற பெயரில் பழமையான கிறிஸ்துமஸ் கேரல்ஸ்களை மையமாகக் கொண்டு கேரல்ஸ் பவனி நடத்தத் தொடங்கினோம். அந்த காலகட்டத்தில் பல குழுக்கள் அவரவர் ஏரியாவில் கேரல்ஸ் நடத்துவார்கள். குறிப்பாக திரேஸ்புரம் பகுதிகளில் பெரிய பட்ஜெட்டில் கேரல்ஸ் அலங்காரங்கள் செய்யப்படும்.

ஆனால் அவர்கள் வெளியில் கொண்டு வராமல் அவர்களது ஏரியாக்குள்ளேயே செய்து வைத்திருப்பர். பெரிய நிகழ்ச்சிகள் அல்லது நகர அளவிலான ஒருங்கிணைந்த ஊர்வலங்கள் எல்லாம் அப்போது இல்லை. இதற்கு முன்பாக, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கடலோரப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களுக்கு ‘மணப்பாடு கேரல்ஸ் வண்டி’ சென்று கிறிஸ்துமஸ் செய்தியை எடுத்துச் சென்றது.

அந்த வகையில் தூத்துக்குடி புனித பனிமய மாதா ஆலயத்திற்கும் அந்த கேரல்ஸ் வண்டி வந்தது. அந்தக் காலத்தில் கேரல்ஸ் வண்டிகள், தேவாலயங்களையும் மக்களையும் இணைக்கும் ஒரு ஆன்மிக சேவையாகவே பார்க்கப்பட்டது. ரிக்‌ஷா, மாட்டுவண்டி என ஒவ்வொரு காலத்திலும் அவர்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றபடி கேலர்ஸ் பவனி ஏற்பாடு செய்து நடந்து வந்தது.

2005 ஆம் ஆண்டுக்குப் பிறகே பல பகுதிகள் ஒன்றிணைந்து, இன்று காணப்படும் போல் பெரிய அளவிலான கேரல்ஸ் கார்னிவல் நடத்தத் தொடங்கினர். பல ஏரியாக்கள் சேர்ந்த பிறகே இந்த விழா ஒரு நகர அளவிலான நிகழ்ச்சியாகவும், இன்றைய கேரல்ஸ் கார்னிவலுக்கான அடித்தளமாகவும் அமைந்தது.

மேலும், “நாங்கள் எந்த தீம் செய்கிறோம் என திட்டமிட்டு அதனை சுமார் 60 நாட்களுக்கு முன்பே செய்ய தொடங்கிவிடுவோம். ஆனால் அந்த தீம் என்ன என்பதைக் குறித்து டிசம்பர் 24 ஆம் தேதி வரை யாருக்கும் தெரியாது. இது பழைய கேரல்ஸ் மரபிலிருந்தே கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் அப்பொழுது இருந்து இப்போது வரை தூத்துக்குடியில் கொண்டாடப்படும் கேரல்ஸ் ஆனது ஜாதி மதம் அற்ற ஒரு நிகழ்வாகவே மக்கள் பார்க்கின்றனர். இதில் சாண்டா கிளாஸ் வேடம் கூட ஒரு முஸ்லிம் பையன் அணிந்திருக்கின்றார்.

எளிய கேரல்ஸ் வண்டிகளிலிருந்து தொடங்கி, இன்று மொத்த தூத்துக்குடியும் கொண்டாடும் பிரமாண்டமான விழாவாக வளர்ந்துள்ள தூத்துக்குடி கேரல்ஸ் கார்னிவல் தற்போது தூத்துக்குடியின் கலாச்சார அடையாளமாகவே மாறியுள்ளது” என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்