சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘பைசன் காளமாடன்’. இதில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். பசுபதி, ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 17-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – இதுவரை தன் வாழ்க்கையை மையப்படுத்திய கதைகளை எடுத்து வந்த மாரி செல்வராஜ் முதல் முறையாக தன் மக்கள் சார்ந்த கவலைகளை படமாக இதனை எடுத்துள்ளதாக கூறியிருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் ட்ரெய்லர் முழுக்க ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை கடத்தும் காட்சிகள் நிறைந்துள்ளன. மூன்று நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய ட்ரெய்லர் பரபரப்பையும், பதற்றத்தையும் தூண்டுகிறது. துருவ் விக்ரமுக்கு இப்படம் நிச்சயமாக பேர் சொல்லும் படமாக அமைய வேண்டும். ரஜிஷா, அனுபமா ஆகியோருக்கும் நடிக்க வாய்ப்பிருக்கும் என்று தெரிகிறது. நிவாஸ் கே பிரசன்னாவின் இசை ஈர்க்கிறது. ‘பைசன்’ ட்ரெய்லர் வீடியோ: