📌 முடிவடைந்த பணிகள்… ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் நெல்லையப்பர் கோயில் வெள்ளி தேர்..! | ஆன்மிகம்

✍️ |
nellai 2025 12 97d64167f8205e94f91b770010accc06 3x2 Thedalweb முடிவடைந்த பணிகள்... ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் நெல்லையப்பர் கோயில் வெள்ளி தேர்..! | ஆன்மிகம்
📌 Last Updated:Dec 21, 2025 7:00 PM ISTபாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.News18நெல்லையப்பர் கோயிலின் வெள்ளித் தேரை சீரமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், ஜனவரி முதல் அது ஓடும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…


Last Updated:

பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

News18
News18

நெல்லையப்பர் கோயிலின் வெள்ளித் தேரை சீரமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், ஜனவரி முதல் அது ஓடும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவிருக்கும் காயிதே மில்லத் நூலகம் உள்ளிட்ட 11 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பழைய பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில், 16 கோடி ரூபாய் செலவில், அனைத்து வசதிகளுடன் புதிய மகளிர் தங்கும் விடுதி அமைக்கப்படும் என்றும் முக்கூடல், பாப்பாக்குடி கிராம விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில், காங்கேயன் கால்வாய் மற்றும் வெள்ளோடையை மேம்படுத்தும் பணிகள் 4 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 5 கோடி ரூபாய் செலவில், வள்ளியூர் பெரிய குளம் மற்றும் வள்ளியூரான் கால்வாய் ஆகியவை புனரமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்