📌 முதல் நெல் கள்ளழகருக்கே… தலைமுறை கடந்து தொடரும் தேனூர் ‘நெல் கோட்டை’ திருவிழா… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5761031 cropped 13022026 004014 videocapture 2026021300395 1 Thedalweb முதல் நெல் கள்ளழகருக்கே... தலைமுறை கடந்து தொடரும் தேனூர் ‘நெல் கோட்டை’ திருவிழா... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 13, 2026 1:57 PM ISTதேனூரில் தலைமுறைகள் கடந்து வரும் நெல் கோட்டை பாரம்பரியம் – கள்ளழகருக்கு முதல் அறுவடை காணிக்கை+ மதுரை தேனூர்மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே அமைந்துள்ள தேனூர் கிராமம், இன்னும் பழமையும் பாரம்பரியமும் உயிருடன் திகழும் இடமாக விளங்குகிறது

2
கண்மாய் மற்றும் கால்வாய் பாசனத்தை நம்பி சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள விளைநிலங்களால் இந்த கிராமம் செழித்து வருகிறது

3
பசுமை வயல்களைத் தாண்டி, பல நூற்றாண்டுகளாக தொடரும் ஆன்மீக வேளாண் பாரம்பரியமே தேனூரின் தனிச்சிறப்பாக உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை தொடங்கிய பின், அறுவடைக்கு தயாராகும் முதல் நெல்லை கிராம மக்கள் கடவுளுக்கான காணிக்கையாக சமர்ப்பிக்கும் வழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 13, 2026 1:57 PM ISTதேனூரில் தலைமுறைகள் கடந்து வரும் நெல் கோட்டை பாரம்பரியம் – கள்ளழகருக்கு முதல் அறுவடை காணிக்கை+ மதுரை தேனூர்மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே அமைந்துள்ள தேனூர் கிராமம், இன்னும்…


Last Updated:

தேனூரில் தலைமுறைகள் கடந்து வரும் நெல் கோட்டை பாரம்பரியம் – கள்ளழகருக்கு முதல் அறுவடை காணிக்கை

+

மதுரை

மதுரை தேனூர்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே அமைந்துள்ள தேனூர் கிராமம், இன்னும் பழமையும் பாரம்பரியமும் உயிருடன் திகழும் இடமாக விளங்குகிறது. கண்மாய் மற்றும் கால்வாய் பாசனத்தை நம்பி சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள விளைநிலங்களால் இந்த கிராமம் செழித்து வருகிறது. பசுமை வயல்களைத் தாண்டி, பல நூற்றாண்டுகளாக தொடரும் ஆன்மீக வேளாண் பாரம்பரியமே தேனூரின் தனிச்சிறப்பாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை தொடங்கிய பின், அறுவடைக்கு தயாராகும் முதல் நெல்லை கிராம மக்கள் கடவுளுக்கான காணிக்கையாக சமர்ப்பிக்கும் வழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கிராம எல்லைக்குட்பட்ட வயல்களில் விளைந்த முதல் நெல்லை, வைக்கோலை திரியாக முறுக்கி “நெல் கோட்டை” எனப்படும் பாரம்பரிய கட்டாக கட்டி, அழகர்கோவிலில் உள்ள கள்ளழகருக்கு சமர்ப்பிப்பதே இந்த வழக்கமாகும்.

இந்த ஆண்டும் அந்த பாரம்பரியம் தொடர்ந்தது. தேனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலையா என்ற ராஜேந்திரனுக்குச் சொந்தமான நிலத்தில் விளைந்த நெல்லே இந்த ஆண்டின் முதல் அறுவடையாக தேர்வு செய்யப்பட்டது. அறுவடைக்கு முன் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பாரம்பரிய முறையில் முதல் கதிர்கள் வெட்டப்பட்டன. அதன் பின்னர் அந்த நெல்லை முனியாண்டி கோவில் களத்தில் குவியலாக சேர்த்தனர்.

பின்னர் கிராம கரைக்காரர், நெல் கோட்டையை தலையில் சுமந்து தேனூர் சுந்தராஜ பெருமாள் கோவில் கொட்டாரத்தில் இறக்கி வைத்தார். அங்கிருந்து அது வாகனத்தில் ஏற்றி அழகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மேளதாள முழக்கத்துடன் கள்ளழகரிடம் ஒப்படைக்கும் வைபவம் நடைபெறும் என கிராமத்தினர் தெரிவித்தனர்.

பழமை மாறாமல் தொடர்ந்து வரும் இந்த நெல் கோட்டை கட்டும் விழாவில், கிராம பொதுமக்கள், கரைக்காரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர். வேளாண்மை வெறும் தொழிலல்ல, அது ஒரு தெய்வீகப் பணி என்ற நம்பிக்கையை தலைமுறைகள் கடந்து உயிருடன் வைத்திருக்கும் தேனூர், பாரம்பரியத்தின் வாழும் சான்றாக இன்றும் திகழ்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…