✅ முத்தாரம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு… 1,008 பால்குடம் எடுத்த பக்தர்கள்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5676981 cropped 01012026 194239 picsart 260101 194229814 w 1 3x2 Thedalweb முத்தாரம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு... 1,008 பால்குடம் எடுத்த பக்தர்கள்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 01, 2026 8:33 PM ISTகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் விவசாயம் தழைக்கவும், மழை வேண்டியும் இன்று 1008 பால்குடம் ஊர்வலம் நடந்தது.+ முத்தாரம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு..

2
1,008 பால்குடம் எடுத்த பக்தர்கள்…திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது

3
இந்த கோவில் தசரா திருவிழாவிற்கு புகழ் பெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தென்மாவட்டங்கள் மற்றும் கோவை, சென்னை போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து இந்த தசரா திருவிழாவிற்கு வருகை தருவார்கள்.இந்த நிலையில் இன்று 2026ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அதிகாலை 3

📌 Last Updated:Jan 01, 2026 8:33 PM ISTகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் விவசாயம் தழைக்கவும், மழை வேண்டியும் இன்று 1008 பால்குடம் ஊர்வலம் நடந்தது.+ முத்தாரம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு… 1,008 பால்குடம் எடுத்த பக்தர்கள்…திருச்செந்தூர்…


Last Updated:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் விவசாயம் தழைக்கவும், மழை வேண்டியும் இன்று 1008 பால்குடம் ஊர்வலம் நடந்தது.

+

முத்தாரம்மன்

முத்தாரம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு… 1,008 பால்குடம் எடுத்த பக்தர்கள்…

திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தசரா திருவிழாவிற்கு புகழ் பெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தென்மாவட்டங்கள் மற்றும் கோவை, சென்னை போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து இந்த தசரா திருவிழாவிற்கு வருகை தருவார்கள்.

இந்த நிலையில் இன்று 2026ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. தொடர்ந்து உலக நலன் வேண்டி துர்கா கந்த மஹா ஹோமம் நடந்தது.

புத்தாண்டு தினம் என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முத்தாரம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து குலசேகரன்பட்டினம் கடற்கரையோரம் அமைந்துள்ள அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவிலிலிருந்து விவசாயம் தழைக்கவும், மழை வேண்டியும் 1008 பால்குடம் ஊர்வலம் நடந்தது.

பால்குடம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பால்குட ஊர்வலத்தின் போது பெண்கள், திருநங்கைகள் கோலாட்டம் ஆடினர். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க 1008 பால்குடம் கோவிலுக்கு வந்தடைந்தது.

தொடர்ந்து முத்தாரம்மன் சமேத ஞானமூர்த்தீஸ்வரருக்கு பால்குட அபிஷேகம், 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்