🚀 முன்னோர் வழிபாட்டின் புனித நாள்… தை அமாவாசையில் காரைக்காலில் குவிந்த பக்தர்கள் | ஆன்மிகம்

✍️ |
HYP 5710957 cropped 18012026 132742 1768723056182 watermark 18 1 3x2 Thedalweb முன்னோர் வழிபாட்டின் புனித நாள்… தை அமாவாசையில் காரைக்காலில் குவிந்த பக்தர்கள் | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 18, 2026 3:29 PM ISTதை அமாவாசையை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரி

2
ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

3
+ தை அமாவாசை புனித நீராடிய பக்தர்கள்…தை அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீசவுந்தராம்பாள் சமேத ஸ்ரீகயிலாசநாதர் சுவாமி ஆலயத்தின் சார்பில் சமுத்திர தீர்த்தவாரி விழா சிறப்பாக நடைபெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த விழாவில் ஸ்ரீசந்திர சேகர் மற்றும் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இந்து மதத்தில் அமாவாசை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

5
குறிப்பாக முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாளாக அமாவாசை போற்றப்படுகிறது

📌 Last Updated:Jan 18, 2026 3:29 PM ISTதை அமாவாசையை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரி. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல். + தை அமாவாசை புனித நீராடிய பக்தர்கள்…தை அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம்…


Last Updated:

தை அமாவாசையை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரி. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்.

+

தை

தை அமாவாசை புனித நீராடிய பக்தர்கள்…

தை அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீசவுந்தராம்பாள் சமேத ஸ்ரீகயிலாசநாதர் சுவாமி ஆலயத்தின் சார்பில் சமுத்திர தீர்த்தவாரி விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்ரீசந்திர சேகர் மற்றும் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்து மதத்தில் அமாவாசை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாளாக அமாவாசை போற்றப்படுகிறது. மாதந்தோறும் வரும் அமாவாசைகள் அனைத்தும் முக்கியமானவை என்றாலும், தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசைகள் மிகுந்த சிறப்பை பெறுகின்றன. அதிலும் தை அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.

இந்த மரபின்படி, ஆண்டுதோறும் தை அமாவாசை நாளில் காரைக்காலில் உள்ள ஸ்ரீகயிலாசநாதர் சுவாமி ஆலயத்திலிருந்து ஸ்ரீசந்திர சேகரரும் அம்பாளும் காரைக்கால் கடற்கரைக்கு எழுந்தருளி சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம்.

அதன்படி, நேற்று காலை ஸ்ரீசந்திர சேகர் பல்லக்கில் ஆலயத்திலிருந்து புறப்பட்டு வீதியுலாவாக காரைக்கால் கடற்கரைக்கு எழுந்தருளினார். தொடர்ந்து அஸ்திர தேவருக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித கலச நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலில் சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஸ்ரீசந்திர சேகர் மற்றும் அம்பாளுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தை அமாவாசை தீர்த்தவாரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்