⚡ மைசூர் மன்னர் வழிபட்ட கோவில்… தோடர் நடனத்துடன் விமரிசையாக நடந்த ஆருத்ரா தரிசனம்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5680753 cropped 03012026 181216 inshot 20260103 180657038 1 3x2 Thedalweb மைசூர் மன்னர் வழிபட்ட கோவில்... தோடர் நடனத்துடன் விமரிசையாக நடந்த ஆருத்ரா தரிசனம்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 04, 2026 1:01 PM ISTநீலகிரி மாவட்டம் ஊட்டியில் தோடர் பழங்குடியினர் பாரம்பரிய நடனத்துடன் ஆருத்ரா தரிசனப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.+ மைசூர் மன்னர் வழிபட்ட கோவில்..

2
தோடர் நடனத்துடன் விமரிசையாக நடந்த ஆருத்ரா தரிசனம்…ஊட்டி அருகே பெர்ன்ஹில் பகுதியில் ஸ்ரீபவானீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது

3
இந்த கோயிலில் சிவன் கோவில்களில் நடைபெறுவது போல் நடராஜப் பெருமானின் ஆருத்ரா தரிசன விழா கடந்த 1910-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.மைசூரு மன்னர் குடும்பத்தினர் வழிபட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதைப்போலவே, இந்த ஆண்டும் 115-வது ஆண்டாக ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது.இதற்காக அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்ட பவானீஸ்வரரை தோடர் பழங்குடியினர் இழுத்துக்கொண்டு சுமார் 6

📌 Last Updated:Jan 04, 2026 1:01 PM ISTநீலகிரி மாவட்டம் ஊட்டியில் தோடர் பழங்குடியினர் பாரம்பரிய நடனத்துடன் ஆருத்ரா தரிசனப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.+ மைசூர் மன்னர் வழிபட்ட கோவில்… தோடர் நடனத்துடன் விமரிசையாக நடந்த ஆருத்ரா…


Last Updated:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தோடர் பழங்குடியினர் பாரம்பரிய நடனத்துடன் ஆருத்ரா தரிசனப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

+

மைசூர்

மைசூர் மன்னர் வழிபட்ட கோவில்… தோடர் நடனத்துடன் விமரிசையாக நடந்த ஆருத்ரா தரிசனம்…

ஊட்டி அருகே பெர்ன்ஹில் பகுதியில் ஸ்ரீபவானீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிவன் கோவில்களில் நடைபெறுவது போல் நடராஜப் பெருமானின் ஆருத்ரா தரிசன விழா கடந்த 1910-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

மைசூரு மன்னர் குடும்பத்தினர் வழிபட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். அதைப்போலவே, இந்த ஆண்டும் 115-வது ஆண்டாக ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது.

இதற்காக அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்ட பவானீஸ்வரரை தோடர் பழங்குடியினர் இழுத்துக்கொண்டு சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள உதகை நகருக்கு கொண்டு வந்தனர். இந்த ஆண்டுக்கான திருத்தேர் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. காலை 6 மணியளவில் பவானீஸ்வரர் கோவிலில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது.

தேருக்கு முன்பு நீலகிரி வாழ் பாரம்பரிய பழங்குடியின மக்களான தோடர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய நடனத்துடன் ஊட்டி மத்திய பஸ் நிலையம், மெயின் பஜார், மாரியம்மன் கோவில், கமர்சியல் சாலை, லோயர் பஜார் வழியாக மீண்டும் கோயிலில் நிறைவடையும். விழா ஏற்பாடுகளை பவானீஸ்வரர் கோயில் பரம்பரை அறங்காவலர் காந்தராஜ் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சிகளில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுடன் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் பங்கேற்றனர். மேலும் இன்று காலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள பாறை முனீஸ்வரர் கோவிலில் முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்வதற்காக நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று மதிய வேளையில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள இடங்களில் தோடர் இன ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரம்பரிய பாடல் பாடி நடனமாடி மகிழ்வார்கள். பழங்குடி மக்கள் ஆண்டுதோறும் இந்த கோவிலில் சிறப்பான முறையில் ஆருத்ரா தரிசனத்தில் பங்கு கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்