மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தை நடத்திவருகிறார் ஸ்ட்ரீட் பாக்ஸரான அருள்நிதி. அந்த இல்லத்தைக் காலி செய்ய வேண்டிய சூழலால் பெரிய பணத்தேவையில் மாட்டுகிறார்.
மறுபுறம், பெரிய கல்விக் குழுமத்தின் தலைவரான ரஞ்சீத் சஜீவ்வின் ஆட்கள், தன்யா ரவிசந்திரனைத் தேடிக் கொலை செய்யத் துடிக்கிறார்கள்.
இந்நிலையில், பணத்திற்காக தன்யாவைக் காக்கும் பொறுப்பைக் கையிலெடுக்கிறார் அருள்நிதி.
இதனால் அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன, தன்யாவை ஏன் துரத்துகிறார்கள், அருள்நிதிக்கும் ரஞ்சீத் சஜீவ்விற்கும் உள்ள தொடர்பு என்ன, அருள்நிதிக்குத் தேவையான பணம் கிடைத்ததா போன்ற கேள்விகளுக்கான பதிலை வேண்டா வெறுப்பாகச் சொல்லியிருக்கிறது முத்தையா இயக்கியுள்ள “ராம்போ’ திரைப்படம்.
சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கிறது இந்தத் தமிழ் சினிமா.

படம் முழுவதும் ஒரே மீட்டரில், வழக்கமான கதாநாயகியாக வந்தாலும், தேவையான எமோஷனைக் கடத்தியிருக்கிறார் தன்யா ரவிச்சந்திரன்.
நடையுடையில் மட்டும் கவனிக்க வைக்கும் ரஞ்சீத் சஜீவ், உருட்டி மிரட்ட வேண்டிய இடங்களில், எந்தத் தாக்கத்தையும் தராமல் படம் முழுவதும் வந்து போகிறார்.