✅ வனப்பகுதியில் இரவு முழுவதும் தொடர்ந்த வழிபாடு… ஆனிக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5783885 cropped 24022026 221235 inshot 20260224 213427769 1 1200x675 Thedalweb வனப்பகுதியில் இரவு முழுவதும் தொடர்ந்த வழிபாடு... ஆனிக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 25, 2026 10:47 AM ISTஆனிக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரவு முதல் அதிகாலை வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், அருள்வாக்கு ஆகியவை நடத்தப்படுகிறது.+ கோவில்நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வனப்பகுதிகள் மற்றும் பலவகையான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்

2
ஒவ்வொருவரும் ஒவ்வொரு குல தெய்வத்தை வழிபாடு செய்கின்றனர்

3
ஆனால் எல்லை காவல் தெய்வங்களாக பல்வேறு தெய்வங்களையும் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.அந்த வகையில் மாயார், மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் ஏழு அம்மன்கள் வனத்தின் எல்லையை பாதுகாக்கும் தெய்வங்களாக கருதப்பட்டு சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது.அந்த வகையில் எப்பநாடு கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் ஆணிக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா விமர்சியாக கொண்டாடப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கிராமத்திலிருந்து மக்கள் அனைவரும் தெய்வத்தை ஏந்தி வனப்பகுதிகள்

📌 Last Updated:Feb 25, 2026 10:47 AM ISTஆனிக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரவு முதல் அதிகாலை வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், அருள்வாக்கு ஆகியவை நடத்தப்படுகிறது.+ கோவில்நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வனப்பகுதிகள் மற்றும்…


Last Updated:

ஆனிக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரவு முதல் அதிகாலை வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், அருள்வாக்கு ஆகியவை நடத்தப்படுகிறது.

+

கோவில்

கோவில்

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வனப்பகுதிகள் மற்றும் பலவகையான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குல தெய்வத்தை வழிபாடு செய்கின்றனர். ஆனால் எல்லை காவல் தெய்வங்களாக பல்வேறு தெய்வங்களையும் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

அந்த வகையில் மாயார், மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் ஏழு அம்மன்கள் வனத்தின் எல்லையை பாதுகாக்கும் தெய்வங்களாக கருதப்பட்டு சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது.

அந்த வகையில் எப்பநாடு கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் ஆணிக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா விமர்சியாக கொண்டாடப்பட்டது. கிராமத்திலிருந்து மக்கள் அனைவரும் தெய்வத்தை ஏந்தி வனப்பகுதிகள் வழியாக நடந்து கோவிலின் அருகாமையில் உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் வருகை தருகின்றனர்.

அதன் பிறகு குறிப்பிட்ட ஒரு தினத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்பட்டு அனைவரும் கோவிலை வந்தடைகின்றனர். இரவு முதல் அதிகாலை வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், அருள்வாக்கு ஆகியவை நடத்தப்படுகிறது.

மேலும் இரவு முதல் அதிகாலை நேரம் வரை பழங்குடியின மக்களின் பாரம்பரிய அரகோல் இசைக்கு ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பாரம்பரியம் முறையில் நடனமாடி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மேலும் மற்றொரு புறத்தில் இயல், இசை, நாடகங்களும் அரங்கேற்றப்பட்டு பொதுமக்கள் இரவு முழுவதும் அம்மனை கண்விழித்து காக்கும் விதமாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து காலை சுமார் 9 மணி அளவில் சிறப்பு பூஜைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து அம்மனுக்காக தீக்குண்டம் இறங்கினர். அதன் பிறகு வன தெய்வங்களுக்கு பலியிடும் செயல்பாடுகளும் நிகழ்த்தப்பட்டு உணவு சமைக்கப்பட்டு உண்டு மகிழ்கின்றனர் பக்தர்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்