‘வாரணாசி’ கிராபிக்ஸ் காளை vs ‘மருதநாயகம்’ ஒரிஜினல் காளை – இணையத்தில் கிளம்பிய விவாதம்! | Varanasi vs Marudhanayagam

✍️ |
‘வாரணாசி’ கிராபிக்ஸ் காளை vs ‘மருதநாயகம்’ ஒரிஜினல் காளை - இணையத்தில் கிளம்பிய விவாதம்! | Varanasi vs Marudhanayagam


எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்த படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு நேற்று குளோப்டிரோட்டர் என்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிட்டது. இதில் அந்த டீசரில் கிராபிக்ஸில் வடிவமைக்கப்பட்ட காளை ஒன்றில் நடிகர் மகேஷ் பாபு அமர்ந்து வருவதை போன்று அமைக்கப்பட்டிருந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் இந்த காட்சி இடம்பெற்றிருந்தது.

இந்த டீசர் மற்றும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியானதுமே, பலரும் கமல்ஹாசன் இயக்கி, நடித்து பாதியில் கைவிட்ட ‘மருதநாயகம்’ படம் குறித்து நினைவுகூரத் தொடங்கிவிட்டனர். கமல்ஹாசனின் கனவுத் படமான ‘மருதநாயகம்’ 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் கடும் நிதிப் பற்றாக்குறை, தயாரிப்புச் சிக்கல்கள் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.

இந்த படத்தின் சிறிய டீசர் ஒன்று அப்போது வெளியானது. அதில் ஒரு காளை மாட்டின் மீது ஓடிவந்து ஏறும் கமல், அதில் கயிறு எதுவும் இன்றி காட்டுக்குள் வேகமாக ஓட்டிச் செல்வார். கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் பெரியளவில் இல்லாத அந்த காலத்தில் உண்மையான காளை மாட்டை பயன்படுத்தி, பல மாதங்கள் பயிற்சி எடுத்து இந்த காட்சியை எடுத்ததாக கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

— GLC25E4400 MNM (@PLCBABU) November 16, 2025

இந்த நிலையில் தற்போது ‘வாரணாசி’ அறிமுக டீசரில் மகேஷ்பாபு கிராபிக்ஸ் மாட்டில் அமர்ந்து வரும் காட்சியுடன் ஒப்பிட்டு பலரும் கமல்ஹாசனின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்திய சினிமாவில் தயாரிக்கப்பட்ட மிக அதிக பொருட்செலவிலான திரைப்படங்களில் ’மருதநாயகம்’ படமும் ஒன்றாக அப்போது கருதப்பட்டது. இப்படத்தின் பட்ஜெட் தோராயமாக ரூ.80 கோடி. இளையராஜா இசையமைக்க, சுஜாதா கதை எழுத நாசர், விஷ்ணுவர்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருந்தனர். 1997-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பிரம்மாண்ட தொடக்க விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கலந்துகொண்டார். கிராபிக்ஸ் அல்லது வேறு ஒரு நடிகரை வைத்து இப்படத்தை மீண்டும் உருவாக்க கமல் திட்டமிட்டு வருவதாகக் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த உறுதியான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ’வாரணாசி’ டீசர் வீடியோ கீழே:

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1383536' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' – நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா…

"நாம் இருவரும் பகிர்ந்த பயணத்துக்கான ஒரு அழகான சின்னம்"-கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர் |The friend on Pradeep Ranganathan car gift

“நாம் இருவரும் பகிர்ந்த பயணத்துக்கான ஒரு அழகான சின்னம்”-கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர் |The friend on Pradeep Ranganathan car gift

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அவரது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராக பணியாற்றி அவர் கூடவே இருக்கும்…

"என்னுடைய கணவர் செல்வா என்னைவிட 10 வயது மூத்தவர்!" - ரோஜா |"My husband Selvamani is 10 years elder than me!" - Roja

“என்னுடைய கணவர் செல்வா என்னைவிட 10 வயது மூத்தவர்!” – ரோஜா |”My husband Selvamani is 10 years elder than me!” – Roja

“இந்த தலைமுறை கணவன்-மனைவி பிரச்னைகளுக்கு தடுக்க, அவர்களுக்கு ஒரு அட்வைஸ் தர வேண்டுமென்றால், என்ன சொல்வீர்கள்?” எனக் கேட்டதற்கு,…