✅ "விஜய் செய்தது, அஜித் கருத்து சரியானதா?" – பார்த்திபன் பதில்!

✍️ |
"விஜய் செய்தது, அஜித் கருத்து சரியானதா?" - பார்த்திபன் பதில்!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
SRM பிரைம் மருத்துவமனையின் மேம்பட்ட ஆராய்ச்சியக தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், செய்தியாளர்களைச் சந்தித்தார்

2
நடிகர் அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில் முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை ஆதரிக்கக் கூடாது எனப் பேசியிருந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன், "முதல் நாள் முதல் காட்சியை வைத்துதான் ஒரு நடிகரின் சம்பளமே முடிவு செய்யப்படுகிறது

3
அவர் எப்போதும் வேறு ஒரு உயரத்தில், வேறு ஒரு பார்வையில் இருக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
விஜய், அஜித் அவர் சொன்னதில் எனக்கு மிக உடன்பாடான விஷயம் என்னவென்றால், என்னிடம் ஒரு தொகுப்பாளர் 4.5 ஆண்டு கால திமுக ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டார்

5
'ஒருவருக்கு 5 வருடங்கள் கொடுக்கிறோம்

📌 SRM பிரைம் மருத்துவமனையின் மேம்பட்ட ஆராய்ச்சியக தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், செய்தியாளர்களைச் சந்தித்தார். நடிகர் அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில் முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை ஆதரிக்கக் கூடாது…


SRM பிரைம் மருத்துவமனையின் மேம்பட்ட ஆராய்ச்சியக தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நடிகர் அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில் முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை ஆதரிக்கக் கூடாது எனப் பேசியிருந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன், “முதல் நாள் முதல் காட்சியை வைத்துதான் ஒரு நடிகரின் சம்பளமே முடிவு செய்யப்படுகிறது. அவர் எப்போதும் வேறு ஒரு உயரத்தில், வேறு ஒரு பார்வையில் இருக்கிறார்.

68f2cc8b49bbd Thedalweb "விஜய் செய்தது, அஜித் கருத்து சரியானதா?" - பார்த்திபன் பதில்!
விஜய், அஜித்

அவர் சொன்னதில் எனக்கு மிக உடன்பாடான விஷயம் என்னவென்றால், என்னிடம் ஒரு தொகுப்பாளர் 4.5 ஆண்டு கால திமுக ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டார். ‘ஒருவருக்கு 5 வருடங்கள் கொடுக்கிறோம். அவர்களுக்கு அதை முழுமையாக கொடுக்க வேண்டும். ஆனால் நாம் 2.5 வருடத்திலேயே விமர்சிக்க அராம்பித்துவிடுகிறோம்.’ என நான் பதிலளித்திருந்தேன்.

இதே போன்ற ஒரு கருத்தை அஜித் அவர்கள் கூறி இருக்கிறார். 5 வருடங்களை கொடுத்துவிட்டோம் என்றால், முழுமையாக ஆட்சி புரியட்டும். அதில் உடன்பாடு இல்லை என்றால் மீண்டும் வரும் தேர்தலில் அதை நாம் காட்டலாம் அல்லது அன்பைக் காட்டலாம் என அவர் கூறியது பிடித்திருந்தது.

அவர் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி, சீட்டை கிழிப்பது, அபிஷேகம் என்ற பெயரில் நடப்பது இதை எல்லாம் ஏன் கூறுகிறார் என்றால், கூட்ட நெரிசலால் நிகழ்ந்த இழப்புகளை மனதில் வைத்து இனிமேல் இப்படி நடக்கக் கூடாது என பேசி இருக்கிறார். எல்லாருடைய பார்வைக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. அதேபோல் அவர் பார்வைக்கும் மரியாதை இருக்கிறது.”

கரூர் துயர சம்பவம்
கரூர் துயர சம்பவம்

கரூர் சம்பவம்

அஜித் பேட்டியில் கரூர் சம்பவத்துக்கு விஜய் மட்டும் காரணமில்லை எனப் பேசியிருந்தது குறித்தக் கேள்விக்கு, “விஜய் அவர்கள் மட்டும் பொறுப்பேற்க முடியாது, நாம் எல்லோரும் பொறுப்பேற்க வேண்டும் என்று நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அதன் உள் அர்த்தங்களை அரசியல் ஆக்காமல், 41 உயிர்கள் நமக்கு திரும்ப கிடைக்காது, எவ்வளவு கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காது. எனவே மறுபடி அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அந்த பதிலில் நான் புரிந்து கொள்ளும் விஷயம்.” எனப் பதிலளித்தார்.

விஜய் நேரில் சென்று சந்திக்காதது குறித்துப் பேசும்போது, “நானாக இருந்தால் நேரில் சென்றிருப்பேன் என வீராவேசமாக சிந்திக்கிறோமேத் தவிர, நடைமுறையில் அது முடியுமா… இதுதான் சரி, அது தவறு என்று இல்லை. அவருக்கு அது சரி எனப்படுகிறது, அதை செய்கிறார். அந்தக் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவ்வளவுதான் வேண்டியது.” என்றார்.

பெரிய பட்ஜெட்டில் புதிய பாதை

தனது அடுத்தடுத்த படங்கள் பற்றி பேசிய அவர், “இப்போது நான் ‘நான் தான் CM 2026 Onwards’ என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறேன். அதை ஏப்ரல் தேர்தலுக்கு முன்பு ரிலீஸ் செய்ய வேண்டும். பவன் கல்யாணுடன் தெலுங்கில் ஒரு படம், மலையாளம் மற்றும் கன்னடத்தில் ஒவ்வொரு படங்களில் நடித்திருக்கிறேன்.

என்னுடைய புதிய பாதை படத்தை மீண்டும் நானே இயக்கி நானே நடிக்கிறேன். அது என் கனவுப்படம். பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. இனி மக்கள் விரும்புகிற மாதிரி படங்களை உருவாக்கப்போகிறேன்.” எனப் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"'பராசக்தி' பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது!" - சுதா கொங்கரா |"'Parasakthi' is releasing for Pongal!" - Sudha Kongara

⚡ “‘பராசக்தி’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது!” – சுதா கொங்கரா |”‘Parasakthi’ is releasing for Pongal!” – Sudha Kongara

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சுதா கொங்கரா, “கண்காட்சிக்கு வருபவர்களுக்கு செவர்லே வின்டேஜ் கார் ரொம்பவே…

"நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்!" - சூர்யா |"I have been a huge fan of Srinivasan!" - Suriya

💡 “நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்!” – சூர்யா |”I have been a huge fan of Srinivasan!” – Suriya

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அஞ்சலி செலுத்தியவர் செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.அதில்…

Parasakthi: "'பராசக்தி' படத்தில் எங்களுக்கு வந்த சவால்கள்!" - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ் | "The challenges we faced in the film 'Parasakthi'!" - 'Parasakthi' Art Director Sharings

🚀 Parasakthi: “‘பராசக்தி’ படத்தில் எங்களுக்கு வந்த சவால்கள்!” – ‘பராசக்தி’ கலை இயக்குநர் ஷேரிங்ஸ் | “The challenges we faced in the film ‘Parasakthi’!” – ‘Parasakthi’ Art Director Sharings

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அது செயல்படுற கண்டிஷனிலும் இருந்தாகணும் 2 அது இங்க கிடையாது…