✅ 108 அடி உயர சதாசிவ ஆலய கும்பாபிஷேகம்… பக்தி பரவசத்துடன் கலந்து கொண்ட பக்தர்கள் !! | புதுச்சேரி செய்தி (Puducherry News)

✍️ |
HYP 5780109 cropped 23022026 090117 images 20260223t090049403 2 Thedalweb 108 அடி உயர சதாசிவ ஆலய கும்பாபிஷேகம்... பக்தி பரவசத்துடன் கலந்து கொண்ட பக்தர்கள் !! | புதுச்சேரி செய்தி (Puducherry News)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 23, 2026 5:15 PM ISTபுதுச்சேரி திருக்காஞ்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சதாசிவ மூர்த்தி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது

2
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.+ திருக்காஞ்சியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா.வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது

3
இங்கு தினந்தோறும் பித்ரு தோஷம் நீங்க தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்நிலையில் திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றின் கரையோரத்தில் ரூ.20 கோடி செலவில் புதிதாக சதா சிவ மூர்த்தி சிலை அமைத்து புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது.இதில் சிறப்பு அம்சமாக 3 தளங்களாக அடிபீடங்கள் அமைக்கப்பட்டு முதல் தளத்தில் 27 நட்சத்திரங்களின் தனி சன்னதி, இரண்டாம் தளத்தில் 12 ராசிகளுக்கான

📌 Last Updated:Feb 23, 2026 5:15 PM ISTபுதுச்சேரி திருக்காஞ்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சதாசிவ மூர்த்தி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.+ திருக்காஞ்சியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா.வில்லியனூர்…


Last Updated:

புதுச்சேரி திருக்காஞ்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சதாசிவ மூர்த்தி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Rapid Read
+

திருக்காஞ்சியில்

திருக்காஞ்சியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா.

வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் பித்ரு தோஷம் நீங்க தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்நிலையில் திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றின் கரையோரத்தில் ரூ.20 கோடி செலவில் புதிதாக சதா சிவ மூர்த்தி சிலை அமைத்து புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு அம்சமாக 3 தளங்களாக அடிபீடங்கள் அமைக்கப்பட்டு முதல் தளத்தில் 27 நட்சத்திரங்களின் தனி சன்னதி, இரண்டாம் தளத்தில் 12 ராசிகளுக்கான தனி சன்னதி, 3-வது தளத்தில் தம்பதி சமேத நவக்கிரகங்களில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒட்டுமொத்தமாக மகா கும்பாபிஷேகம் நேற்று (பிப்.22 ) மிகச் சிறப்பாக நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலைமுதல் கால யாக சாலை தொடங்கியது.

இதில் 64 யாக வேள்விகள் 108 சிவாச்சாரியார்களை கொண்டு நான்கு கால யாக பூஜை நடைபெற்று வந்தது. தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க 13 கோபுர கலசங்கள் மற்றும் 108 சிவலிங்கத்துக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் புதுச்சேரி வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மற்றும் புதுவை, தமிழக பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Vinayagar 3 2026 02 10aaa90e494b25b0f11ae3c2c6696bb9 Thedalweb Today Rasi Palan | வார தொடக்கத்திலேயே ஜாக்பாட்.. உங்க ராசிக்கு எப்படி? இன்றைய ராசிபலன்.. பிப்ரவரி 23, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Today Rasi Palan | வார தொடக்கத்திலேயே ஜாக்பாட்.. உங்க ராசிக்கு எப்படி? இன்றைய ராசிபலன்.. பிப்ரவரி 23, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 துலாம்இன்று ஒட்டுமொத்த நேர்மறையான நாள் 2 சமூக வாழ்க்கை ஆற்றல்…

HYP 5779569 cropped 22022026 193523 inshot 20260222 193506486 2 Thedalweb கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்... திரளான பக்தர்கள் தரிசனம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் தரிசனம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Last Updated:Feb 22, 2026 8:25 PM ISTகொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழாவில்…

HYP 5779004 cropped 22022026 144123 inshot 20260222 144105957 2 Thedalweb திருச்செந்தூர் காவடி யாத்திரை... கன்னியாகுமரியிலிருந்து உற்சாகமாக கிளம்பிய பக்தர்கள்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

💡 திருச்செந்தூர் காவடி யாத்திரை… கன்னியாகுமரியிலிருந்து உற்சாகமாக கிளம்பிய பக்தர்கள்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Feb 22, 2026 6:51 PM ISTபல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…