120 அடி உயரம்.. 200 டன் எடை.. ஒரே கிரானைட் பீஸில் உருவான சிவலிங்கம்.. பக்தர்கள் பரவசம்! | ஆன்மிகம்

✍️ |
Shivan 1 2025 12 5e6172ab0a8615fc4bb70952b728df17 3x2 Thedalweb 120 அடி உயரம்.. 200 டன் எடை.. ஒரே கிரானைட் பீஸில் உருவான சிவலிங்கம்.. பக்தர்கள் பரவசம்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்த பிரமாண்டமான சிவலிங்கத்தை பல மாநிலங்களை கடந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்ல 96 சக்கரங்கள் கொண்ட சிறப்பு ஹைட்ராலிக் டிரெய்லர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

2
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய சிவலிங்கம், பீஹார் மாநிலத்தின் கிழக்கு சாம்பரானில் விரைவில் திறக்கப்பட உள்ள விராட் ராமாயண் (Virat Ramayan Temple) கோவிலில் நிறுவப்படும், இந்த புதிய கோயில் திறக்கப்பட்டவுடன் இந்த சிவலிங்கம் அதன் முக்கிய ஈர்ப்பாக இருக்கும்

3
திட்டமிடப்பட்டுள்ள பாதை, போக்குவரத்து மற்றும் வானிலையைப் பொறுத்து சிவலிங்கத்தை எடுத்து செல்லும் பயணம் சுமார் 20 முதல் 25 நாட்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மிகப்பெரிய சிவலிங்கத்தை எடுத்து செல்லும் பயணத்தின் போது போக்குவரத்து சீராகவும் தாமதமின்றியும் நடைபெறுவதை உறுதி செய்ய, பயணம் நடைபெற உள்ள


இந்த பிரமாண்டமான சிவலிங்கத்தை பல மாநிலங்களை கடந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்ல 96 சக்கரங்கள் கொண்ட சிறப்பு ஹைட்ராலிக் டிரெய்லர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய சிவலிங்கம், பீஹார் மாநிலத்தின் கிழக்கு சாம்பரானில் விரைவில் திறக்கப்பட உள்ள விராட் ராமாயண் (Virat Ramayan Temple) கோவிலில் நிறுவப்படும், இந்த புதிய கோயில் திறக்கப்பட்டவுடன் இந்த சிவலிங்கம் அதன் முக்கிய ஈர்ப்பாக இருக்கும். திட்டமிடப்பட்டுள்ள பாதை, போக்குவரத்து மற்றும் வானிலையைப் பொறுத்து சிவலிங்கத்தை எடுத்து செல்லும் பயணம் சுமார் 20 முதல் 25 நாட்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய சிவலிங்கத்தை எடுத்து செல்லும் பயணத்தின் போது போக்குவரத்து சீராகவும் தாமதமின்றியும் நடைபெறுவதை உறுதி செய்ய, பயணம் நடைபெற உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.

நீண்ட பயணம் தொடங்கியது:

ETV பாரத் அறிக்கையின்படி மகாபலிபுரம் அருகே உள்ள பட்டிக்காடு என்ற பகுதியில் ஒரே கிரானைட் கல் மூலம் உருவாக்கப்பட்ட இந்த மிகப்பெரிய சிவலிங்கத்தை திறமையான கைவினைஞர்கள் ஒன்று சேர்ந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அதை வடிவமைக்க செலவிட்டனர், இந்த உருவாக்கத்தில் சிறப்பு கவனம் என்பது செதுக்குதல் மற்றும் ஒட்டுமொத்த சமநிலைக்கு கொடுக்கப்பட்டது. இதை உருவாக்குவதற்கான செலவு ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பெரிய சிவலிங்கத்தை சுமந்து செல்லும் டிரெய்லர் பல நகரங்கள் வழியாக செல்லும், அங்கு மக்கள் பிரார்த்தனை செய்வதற்காக தற்காலிக மேடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. சிவலிங்கள் நிற்கும் இடங்களில் எல்லாம் சடங்குகள் மற்றும் குறுகிய ஊர்வலங்களுடன் அதை வரவேற்க பல பக்தர்கள் தயாராகி வருகின்றனர். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பூஜைகளைச் செய்ய பல்வேறு இடங்களில் பூசாரிகளும் இருப்பார்கள்.

இந்தியாவில் ஒரு கோவிலுக்குள் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஒற்றைக்கல் கிரானைட் சிவலிங்கமாகவும் இது இருக்கும். இது Chakia-வை அடைந்ததும், கோயில் குழு அதனை நிறுவ தயாராகும். புனிதமான ‘பிராண-பிரதிஷ்டா’ விழா 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நல்ல நேரத்தில் நடைபெறும்.

சீராக நடைபெற்று வரும் கோயில் பணிகள்:

விராட் ராமாயணக் கோயில் பாட்னாவில் உள்ள மகாவீர் மந்திர் அறக்கட்டளையால் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் வளாகம் 1080 அடி நீளமும் 540 அடி அகலமும் கொண்டதாக இருக்கும், அதன் சுவர்களில் ராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்படும். மேலும் இந்த கோவிலில் 22 சன்னதிகள், 18 கோபுரங்கள் மற்றும் 270 அடி உயரமுள்ள ஒரு பிரதான கோபுரம் ஆகியவை அடங்கும். இந்த கோயிலின் நுழைவு வாயில், கணேஷ் ஸ்தல், சிங் துவார், நந்தி மற்றும் கருவறையின் தூண் உள்ளிட்ட கட்டமைப்பின் சில முக்கிய பகுதிகளின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. தமிழ்நாட்டில் உருவாக்கபட்ட இந்த பெரிய சிவலிங்கம் பீகாரை அடைந்த பிறகு, நடைபெற உள்ள ‘பிராண பிரதிஷ்டை’-யில் துறவிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் படிப்படியாக பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அசாமின் 126 அடி உயர சிவலிங்கம்:

அசாம் மாநிலம் நாகோனில் உள்ள மஹா மிருத்யுஞ்சயா கோவிலில் 126 அடி உயர சிவலிங்கம் உள்ளது. இந்த சூழலில் இந்த சிவலிங்கம் உலகின் மிக உயரமானது என்று சோஷியல் மீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு சில நெட்டிசன்கள் எதிர்வினையாற்றி உள்ளனர். “ஹர் ஹர் மகாதேவ்” மற்றும் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று பலர் கருத்து தெரிவித்தனர். ஒரு நபர் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கேள்வி எழுப்பினார், “200 டன் எடையுள்ள கல்லை செதுக்க ஒரு மலையை வெட்ட வேண்டும், அது அந்த மலைத்தொடரைச் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதிக்கலாம்” என்று கூறினார்.

உலகின் மிக உயரமான என்ற வார்த்தைக்கு ஒரு யூஸர், ‘126 அடி சிவலிங்கம் ஏற்கனவே அசாமில் உள்ளது. அப்படி என்றால் இது எப்படி உயரமானது என்று சிலர் கூறுகின்றனர்?’ என வினவியுள்ளார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்