⚡ 20 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்… வெள்ளையம்பலம் குடிலில் இந்த ஆண்டு சிறப்பு என்ன..? | ஆன்மிகம்

✍️ |
HYP 5660371 cropped 24122025 142046 inshot 20251224 142031206 1 3x2 Thedalweb 20 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்... வெள்ளையம்பலம் குடிலில் இந்த ஆண்டு சிறப்பு என்ன..? | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 24, 2025 5:06 PM ISTChristmas Kudil: பைபிளில் கூறப்பட்டுள்ளது போல் கடவுளின் முதல் நாள் படைப்பு முதல் ஏழு நாட்கள் படைப்பு வரை தத்ரூபமாக இந்த குடிலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.+ 20 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்..

2
வெள்ளையம்பலம் குடிலில் இந்த ஆண்டு சிறப்பு என்ன..?கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் ஸ்டார் மற்றும் வண்ண விளக்குகள் தொங்கவிட்டு வீடுகளை அலங்கரிப்பர்

3
இதேபோன்று தேவாலயங்களில் குடில்கள் கட்டுவது, பிரம்மாண்ட ஸ்டார்கள் தொங்கவிடுவது மற்றும் வண்ண விளக்குகளால் தேவாலயங்களை அலங்கரிப்பது என பல்வேறு வடிவங்களில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது.தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதற்காக மாவட்டம் முழுவதும்

📌 Last Updated:Dec 24, 2025 5:06 PM ISTChristmas Kudil: பைபிளில் கூறப்பட்டுள்ளது போல் கடவுளின் முதல் நாள் படைப்பு முதல் ஏழு நாட்கள் படைப்பு வரை தத்ரூபமாக இந்த குடிலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.+ 20 ஆண்டுகளாக தொடரும்…


Last Updated:

Christmas Kudil: பைபிளில் கூறப்பட்டுள்ளது போல் கடவுளின் முதல் நாள் படைப்பு முதல் ஏழு நாட்கள் படைப்பு வரை தத்ரூபமாக இந்த குடிலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

+

20

20 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்… வெள்ளையம்பலம் குடிலில் இந்த ஆண்டு சிறப்பு என்ன..?

கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் ஸ்டார் மற்றும் வண்ண விளக்குகள் தொங்கவிட்டு வீடுகளை அலங்கரிப்பர். இதேபோன்று தேவாலயங்களில் குடில்கள் கட்டுவது, பிரம்மாண்ட ஸ்டார்கள் தொங்கவிடுவது மற்றும் வண்ண விளக்குகளால் தேவாலயங்களை அலங்கரிப்பது என பல்வேறு வடிவங்களில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதற்காக மாவட்டம் முழுவதும் பல்வேறு தேவாலயங்களில் பிரம்மாண்டக் குடில்கள் கட்டப்படுகிறது. இதில் சில குடில்கள் கட்டுவதற்குப் பல லட்சங்கள் வரை செலவு செய்யப்படுகிறது.

இந்த பிரம்மாண்டக் குடில்கள் கட்டும் வழக்கம் குமரி மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே கடைப்பிடித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்னரே தொடங்கப்படும் இந்த குடில்கள் அமைக்கும் பணி மற்றும் தேவாலயங்களை அலங்கரிப்பதற்கான பணிகளில் அந்தந்த ஊர் இளைஞர்களின் உழைப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் குமரியில் பல்வேறு இடங்களில் களைகட்ட தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை வெள்ளையம்பலம் பகுதியில் இயேசு கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் வகையில் பிரம்மாண்ட குடில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வெள்ளையம்பலம் பகுதியை சேர்ந்த ராஜன் கூறுகையில், “நாங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடில்கள் மற்றும் மின் விளக்குகள் அமைத்து வருகிறோம். இந்த ஆண்டு பல லட்சம் ரூபாய் செலவில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் குடில் அமைத்து வருகிறோம்.

இந்த குடிலில் பைபிளில் கூறப்பட்டுள்ளது போல் கடவுளின் முதல் நாள் படைப்பு முதல் ஏழு நாட்கள் படைப்பு வரை தத்ரூபமாக வடிவமைத்துள்ளோம். இந்த குடில் புத்தாண்டு முடியும் வரை பொது மக்களுக்காக காட்சிப்படுத்தப்படுகிறது. இங்கு குடில் மட்டுமல்லாது சிறுவர்கள் விளையாடும் வகையில் பல்வேறு ராட்டினங்கள் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் குடிலை காண வரும் பொதுமக்களுக்கு நிச்சயம் இது ஒரு நல்ல பொழுதுபோக்காக அமையும்” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்