🚀 35 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பருக்கு வெள்ளி தேர்..! | திருநெல்வேலி

✍️ |
HYP 5679360 cropped 03012026 084154 img 20260102 185904 waterm 2 3x2 Thedalweb 35 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பருக்கு வெள்ளி தேர்..! | திருநெல்வேலி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 07, 2026 2:20 PM ISTநெல்லையப்பர் கோவிலில் உபயதாரர்கள் மூலம் பெற்ற 425 கிலோ வெள்ளியினைக் கொண்டு புதியதாக வெள்ளித்தேர் செய்து முடிக்கப்பட்டுள்ளது.+ 1991க்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் ஓடிய வெள்ளி தேர் திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்

2
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது

3
இங்கு பக்தர்களுக்கு காட்சி தரும் சுயம்பு வடிவ லிங்கத்தினை 'நெல்லையப்பர்' என்ற பெயரிலும் 'வேண்ட வளர்ந்தநாதர்' என்ற பெயரிலும் வழிபடுகின்றனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த கோவிலில் வெள்ளி தேர் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் வெள்ளோட்டம் நடைபெற்றது

5
35 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி

📌 Last Updated:Jan 07, 2026 2:20 PM ISTநெல்லையப்பர் கோவிலில் உபயதாரர்கள் மூலம் பெற்ற 425 கிலோ வெள்ளியினைக் கொண்டு புதியதாக வெள்ளித்தேர் செய்து முடிக்கப்பட்டுள்ளது.+ 1991க்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் ஓடிய வெள்ளி தேர் திருநெல்வேலி மாவட்டம்…


Last Updated:

நெல்லையப்பர் கோவிலில் உபயதாரர்கள் மூலம் பெற்ற 425 கிலோ வெள்ளியினைக் கொண்டு புதியதாக வெள்ளித்தேர் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

Rapid Read
+

1991க்கு

1991க்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் ஓடிய வெள்ளி தேர் 

திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்களுக்கு காட்சி தரும் சுயம்பு வடிவ லிங்கத்தினை ‘நெல்லையப்பர்’ என்ற பெயரிலும் ‘வேண்ட வளர்ந்தநாதர்’ என்ற பெயரிலும் வழிபடுகின்றனர். இந்த கோவிலில் வெள்ளி தேர் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் வெள்ளோட்டம் நடைபெற்றது. 35 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 1991ல் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் வெள்ளித்தேர் சேதமடைந்த நிலையில் மீண்டும் புதிதாக செய்யப்பட்டுள்ளது .

இந்த தேரின் சிறப்பு குறித்து பக்தர் வெங்கடசுப்பிரமணியன் கூறுகையில், “ஸ்வேத கேது என்கிற அரசன் அனுதினமும் நெல்லையப்பரை பூஜித்து வந்தார். அவரது அந்திமக்காலம் நெருங்கியதை அறிந்து இறைவனது ஆலயத்திலே அமர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது காலன் அரசனை ஆட்கொள்ள பாசக்கயிற்றை வீசியபோது அரசன் அலறி பதறி அஞ்சி இறைவனை நோக்கி அபயம் வேண்டினார். இறைவன் காலனைக் காலால் கடிந்தார். இறைவன் அரசனிடம், மனம் வருந்தி மாள வேண்டாம் என்றும், நீயே இஷ்டப்பட்டு முக்தியடையலாம் எனவும் இறைவன் அருள் பாலித்த திருவிளையாடல் இத்தலத்தில் நடந்துள்ளது.

இந்தத் திருவிளையாடல் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் பூரம், உத்திரம், அஸ்தம் ஆகிய நட்சத்திர தினங்களில் சிவலிங்க பூஜை செய்து பஞ்சமூர்த்திகளை ஒரே செப்பு ரதத்தில் வைத்து திருவீதி உலாவரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது, தற்போதும் இவ்விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன் காலத்தில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதத்தில் திருவீதி உலா வந்துள்ளது. அந்த ரதம் முற்றிலும் சேதமடைந்ததால் தற்போது செப்பு ரதத்தில் பஞ்சமூர்த்திகள் நான்கு ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.

தன் பொருநைக் கரையோரம் தன்னைத் தொழுவோரை கரை சேர்க்கும் இத்திருத்தலத்தில் பெருவிழாக்கள், திருவிழாக்கள், தேரோட்டம், தெப்ப உற்சவம் எனப் பல்வேறு விழாக்கள் நடக்கின்றன. இன்னும் பெருஞ்சிறப்பாய் தினம் தினம் திருவிழாவாய் திகழ பொன்னும் மெய்ப்பொருளும் தரும் எம்பெருமானும், அன்னை காந்திமதியும் வலம் வரும் வகையில் புதியதாக வெள்ளித்தேர் செய்திட அரசு அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து, உபயதாரர்கள் மூலம் பெற்ற 425 கிலோ வெள்ளியினைக் கொண்டு புதியதாக வெள்ளித்தேர் செய்து முடிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்