💡 4,380 நாட்களுக்குப் பின் காட்சியளித்த அத்திவரதர்… குடந்தையில் குவியும் கூட்டம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5791630 athivarathar 2 1200x675 Thedalweb 4,380 நாட்களுக்குப் பின் காட்சியளித்த அத்திவரதர்... குடந்தையில் குவியும் கூட்டம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Mar 01, 2026 3:38 PM IST12 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் தரிசனத்தை காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.+ அத்தி வரதர்கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு…


Last Updated:

12 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் தரிசனத்தை காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

அத்தி

அத்தி வரதர்

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையிலிருந்து வெளியே வந்த அத்தி வரதரை தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் தரிசனம் கிடைப்பது போல, கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சரியாக 12 ஆண்டுகள் கடந்து, இன்று அந்தப் புனிதமான அத்திவரதர் திருமேனி பாதாள அறையிலிருந்து வெளியே வந்தார்.

இன்று தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை, வெறும் 10 நாட்கள் மட்டுமே இந்த அபூர்வ தரிசனம் பக்தர்களுக்குக் கிடைக்கப் போகிறது. இந்த 10 நாட்களும் அத்திவரதருக்குத் தைலக்காப்பு, புஷ்பாஞ்சலி, ஊஞ்சல் சேவை போன்ற பல்வேறு வழிபாடுகள் நடைபெற உள்ளன..

12 ஆண்டு காலத் தனிமையை முடித்துக்கொண்டு, மக்கள் வெள்ளத்தில் நீந்த வந்திருக்கும் அந்த எம்பெருமானைக் காண, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்