துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது.
இதனை அஜித் குமார் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தற்போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் அஜித் குமாருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து தனது “எக்ஸ்’ பக்கத்தில் நயினார் நாகேந்திரன், “சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் பல வெற்றிகளைக் குவித்து வரும் நடிகர் அஜித்தின் Ajith Kumar Racing அணி, 24H ஐரோப்பிய கார் பந்தய தொடரில் ஒட்டுமொத்தமாக 3ம் இடம் பிடித்து, நம் தேசத்துக்குப் பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி.
இந்த வெற்றியின் மூலம், நம் இந்திய நாடு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார்.
அஜித்குமாரின் அணி மென்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பாராட்டியிருக்கிறார்.