‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக நடிக்கும் படத்தை “லவ்வர்’, ’டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் எழுதி இயக்குகிறார்.
எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஸயான் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணை தயாரிப்பு செய்கிறார். இதில் அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
நவீன கால இளைஞர்களைக் கவரும், காதல் கதையாக உருவாகும் இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 35 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இப்போது நடந்து வருகின்றன.