‘ஆர்யன்’ கிளைமாக்ஸை மாற்றியது ஏன்? – நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் | why aryan climax changed actor vishnu vishal explains

✍️ |
‘ஆர்யன்’ கிளைமாக்ஸை மாற்றியது ஏன்? - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் | why aryan climax changed actor vishnu vishal explains


விஷ்ணு விஷால், செல்​வ​ராகவன், ஷ்ரத்தா ஸ்ரீ​நாத், மானசா உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள படம், ‘ஆர்​யன்’. விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்​பில், சுப்ரா மற்​றும் ஆர்​யன் ரமேஷ் வழங்​கி​யுள்ள இப்படத்தை பிரவீன் கே இயக்​கி​யுள்​ளார். அக். 31-ல் வெளி​யான இப்​படம் வரவேற்​பைப் பெற்​றுள்​ளதை அடுத்​து, நன்றி தெரிவிக்​கும் விழா சென்னை​யில் நடந்​தது.

படக்​குழு​வினர் கலந்​து​கொண்ட விழா​வில் படத்​தின் தயாரிப்​பாள​ரும் ஹீரோவு​மான விஷ்ணு விஷால் கூறும்​போது, “ஆர்​யன் படத்தை முதலில் 2023-ம் ஆண்டு வெளி​யிடத் திட்​ட​மிட்​டிருந்​தோம். தாமதம் காரண​மாகப் படத்தை இன்​னும் சிறப்​பாக உரு​வாக்க முடிந்​தது. இயக்​குநர் பிர​வீன் ஒரு புது​மை​யான, துணிச்​சலான படத்தை உரு​வாக்​கி​யுள்​ளார்.

இப்​படத்​தின் கதை​யில் நான் தலை​யிட்​டே​னா? எனக் கேட்​கிறார்​கள். சினிமா கூட்டு முயற்​சி​தான். தலை​யிடு​வது என்​பது என்​னைப் பொறுத்​தவரை ஒரு ஹீரோ​வாக பொறுப்பு எடுத்​துக் கொள்​வது என நினைக்​கிறேன்.

தியேட்டருக்கு பார்​வை​யாளர்​கள் வரும் போது இயக்​குநருக்​காக மட்​டும் வரவில்​லை. நடிகருக்​காக​வும் வரு​கிறார்​கள். எனவே அது என்​னுடைய பொறுப்பு தான். இப்​படத்​தின் கிளை​மாக்ஸ் பற்றி நிறைய விவாதம் எங்​களுக்​குள்​ளேயே நடந்​தது. ஒரு விஷ​யத்தை நியாயப்​படுத்​தலாம் என்​றும் வேண்​டாம் என்​றும் இரு தேர்​வு​கள் இருந்​தன. பார்​வை​யாளர்​களுக்கு இப்​படி இருந்​தால் பிடிக்​கும் என நினைத்து ஒன்றை வைத்​தோம்.

ஆனால் அது​தான் இப்​போது நெகட்​டிவ் விஷ​யங்​களைப் பெறுகிறது. அதை​யும் கவனித்து படத்​திலிருந்து நீக்​கி, அதனை மாற்றி இருக்​கிறோம். புதிய கிளை​மாக்​ஸுடன் படம் தற்​போது வெற்​றிகர​மாக ஓடு​கிறது.

என் சமீபத்​திய படங்​கள் திரையரங்​கிலும் ஓடிடி-​யிலும் சிறப்​பாக செயல்​பட்​டுள்​ளன; ஆர்​யனும் அதே போல பெரும் வரவேற்பைப் பெற்​றுள்​ளது.

அடுத்து ‘கட்டா குஸ்தி 2’, என் சகோ​தரருடன் ஒரு படம், அருண்​ராஜா காம​ராஜ் இயக்​கும் படம் என வர இருக்​கிறது. ரசிகர்​கள் விரும்​பும் படங்​களைத்​ தொடர்ந்​து உருவாக்​கு​வேன்​” என்​றார்​.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382308' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

KP Jagan:" `ஆட்டோகிராப்' வெற்றிக்கு எனக்கு சேரன் சார் பைக் வாங்கித் தந்தாரு!" - கே. பி. ஜெகன் | "Cheran sir gifted me bike for Autograph success!" - KP Jagan

KP Jagan:” `ஆட்டோகிராப்’ வெற்றிக்கு எனக்கு சேரன் சார் பைக் வாங்கித் தந்தாரு!” – கே. பி. ஜெகன் | “Cheran sir gifted me bike for Autograph success!” – KP Jagan

இதுக்கு முன்பே நான் செய்த படங்களுக்கு இதே தலைப்பை பொருத்திப் பார்த்திருக்கேன். ஆனா, இந்த கதைக்குதான் அது மிகக்…

``பெண்களிடம் அதை எதிர்பார்பது தவறு" - சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் | ``It was wrong that we expect in women!" - Rahul Ravindran

“பெண்களிடம் அதை எதிர்பார்பது தவறு” – சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் | “It was wrong that we expect in women!” – Rahul Ravindran

அந்தப் பேட்டியில் ராகுல், “திருமணத்துக்குப் பிறகு என் மனைவி சின்மயியிடம் தாலி அணிவது உன்னுடைய தேர்வு என்று சொன்னேன்.…