“தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த கௌரி கிஷனைப் பாராட்டுகிறோம்” – கௌரி கிஷன் | We appreciate Gouri Kishan for expressing her opinions firmly and confidently,” said The Chennai Press Club

✍️ |
"தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த கௌரி கிஷனைப் பாராட்டுகிறோம்" - கௌரி கிஷன் | We appreciate Gouri Kishan for expressing her opinions firmly and confidently,” said The Chennai Press Club


தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை கௌரி கிஷன் தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று (நவ.7) வெளியாகியிருக்கிறது.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (நவ.6) சென்னையில் நடைபெற்றது.

அந்த செய்தியாளர் சந்திப்பில் சினிமா நிருபர் ஒருவருக்கும், கௌரி கிஷனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஏற்கனவே நடந்த செய்தியாளர் சந்திப்பில் அந்த நிருபர் ஹீரோவிடம், “கௌரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?” என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

கௌரி கிஷன்

கௌரி கிஷன்

இந்நிலையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கௌரி கிஷன், “நீங்கள் தானே அன்றைக்கு கேள்வி கேட்டது. எப்படி அதனைக் கேட்கலாம். அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னவென்று கேட்குறீங்க. என்னோட எடை தெரிந்துகொண்டு என்ன செய்ய போகிறீர்கள்? இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங்” என அந்த நிரூபருக்குத் தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பலரும் கௌரி கிஷனிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கமும், சென்னை பத்திரிகையாளர் மன்றமும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு…

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி…

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi's My Dear Sister first look released

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi’s My Dear Sister first look released

அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள…