💡 "மாரி செல்வராஜ் தம்பி இல்லைன்னா நான் எப்படி இருந்திருப்பேன்னு தெரில – இது புளியங்குளம் கண்ணனின் கதை

✍️ |
"மாரி செல்வராஜ் தம்பி இல்லைன்னா நான் எப்படி இருந்திருப்பேன்னு தெரில - இது புளியங்குளம் கண்ணனின் கதை
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மாரி செல்வராஜின் படங்களில் பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டி மற்ற அத்தனை துணைக் கதாபாத்திரங்களிலும் நடிப்பின் அறிமுகம் துளியும் இல்லாத ஊர் மக்களே இருப்பார்கள்

2
ஆர்ப்பாட்டமில்லாத அவர்களின் யதார்த்த நடிப்பு மாரி செல்வராஜின் படைப்புகளை இன்னும் இயல்பாக மாற்றும்

3
உடன் இருக்கும் ஒருவராக அவர்கள் திரையில் தோன்றி அப்படைப்புகளை இன்னும் நமக்கு நெருக்கமாக்கி விடுவார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அந்த மக்களும் இன்று அழுத்தம் தரும் நடிகர்களாக மாறி பாராட்டுகளைப் பெற்று வருகிறார்கள்

5
Mari Selvaraj & Dhruvஅவர்களுள் புளியங்குளம் கண்ணன் முக்கியமானவர்

📌 மாரி செல்வராஜின் படங்களில் பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டி மற்ற அத்தனை துணைக் கதாபாத்திரங்களிலும் நடிப்பின் அறிமுகம் துளியும் இல்லாத ஊர் மக்களே இருப்பார்கள். ஆர்ப்பாட்டமில்லாத அவர்களின் யதார்த்த நடிப்பு மாரி செல்வராஜின் படைப்புகளை இன்னும் இயல்பாக மாற்றும்….


மாரி செல்வராஜின் படங்களில் பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டி மற்ற அத்தனை துணைக் கதாபாத்திரங்களிலும் நடிப்பின் அறிமுகம் துளியும் இல்லாத ஊர் மக்களே இருப்பார்கள்.

ஆர்ப்பாட்டமில்லாத அவர்களின் யதார்த்த நடிப்பு மாரி செல்வராஜின் படைப்புகளை இன்னும் இயல்பாக மாற்றும்.

உடன் இருக்கும் ஒருவராக அவர்கள் திரையில் தோன்றி அப்படைப்புகளை இன்னும் நமக்கு நெருக்கமாக்கி விடுவார்கள். அந்த மக்களும் இன்று அழுத்தம் தரும் நடிகர்களாக மாறி பாராட்டுகளைப் பெற்று வருகிறார்கள்.

Mari Selvaraj & Dhruv
Mari Selvaraj & Dhruv

அவர்களுள் புளியங்குளம் கண்ணன் முக்கியமானவர். பரியனுக்கு அண்ணனைப் போல தோள் கொடுக்கும் இடம், கிட்டானுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும் இடம் என நடிப்பில் தோன்றும் காட்சிகளில் தாக்கம் தந்துவிடுவார்.

‘பைசன்’ படத்தில் முழு நீள கதாபாத்திரத்தில் களமிறங்கி அவர் அடுத்த கட்டத்தைத் தொட்டிருக்கிறார். ‘பைசன்’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு அவருக்கு சினிமா வாய்ப்புகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. வாழ்த்துகள் சொல்லி மழைக் கொட்டும் மாலை வேளையில் உரையாடினோம்.

நம்மிடையே பேசிய புளியங்குளம் கண்ணன், “வணக்கம்ங்க! தியேட்டர்ல கிடைச்ச மாதிரியே ‘பைசன்’ படத்துக்கு ஓடிடி-யில நல்ல வரவேற்பு தர்றாங்க. இதுக்கு முன்னாடி சின்னச் சின்ன கதாபாத்திரங்கள்ல நடிச்சிருப்பேன்.

‘பைசன்’ படத்துல தம்பி மாரி செல்வராஜ் பெரிய கேரக்டர் கொடுத்திருக்காரு. தெரியாத பலரும் பாராட்டுலாம் சொல்றாங்க.

சினிமாக்காரங்களும் பாராட்டுறாங்க. நிறைய பேர் ‘நீங்க ஆக்டரா? ஊர்காரரா?’னு கேக்குறாங்க. நான் நடிச்சிருக்கிற கேரக்டர்ல முதல்ல நடிகர் ஹரிகிருஷ்ணன்தான் நடிக்க வேண்டியது.

Bison
Bison

கபடி விளையாடி அவருக்கு இன்ஜூரி ஆகிடுச்சு. பிறகுதான் தம்பி என்னை நடிக்கக் கூப்பிட்டாரு. ஷூட்டிங்ல எப்பவுமே தம்பிகூடதான் இருப்போம். எதாவது டயலாக் பேசணும்னா உடனே தம்பி சொல்வாரு.

நாங்க ரெடி ஆகிடுவோம். நடிக்கிறதுன்னு மட்டும் கிடையாது. டைரக்டர்கூட எப்பவும் ஷூட்டிங்ல இருப்போம்.

தம்பி எங்கக் கூப்பிட்டாலும் உடனடியாக நாங்க போயிடுவோம். எங்க ஊர் ஆட்கள் எப்பவும் 50, 60 ஆட்கள் அவர்கூடவே உதவியாகவே இருப்போம்.

ஜூனியர் ஆர்டிஸ்ட்ல இருந்து எவ்வளவு கஷ்டமான வேலையா இருந்தாலும் அதை நாங்க செஞ்சிடுவோம்.” என்றவர், “நான் சின்னப் பிள்ளையா இருக்கும்போதிருந்து மணத்தி கணேசன் அண்ணனைத் தெரியும்.

தென்மாவட்டங்கள்ல அவர் பெரிய நட்சத்திரம். அவருக்குன்னு இங்க ரசிகர் கூட்டமே இருக்கு. அவர் பெரிய பெரிய இடங்களுக்குப் போன பிறகுதான் நாங்க விளையாட ஆரம்பிச்சோம்.

அவர் கப் அடிச்சிட்டு வரும்போதெல்லாம் இங்க பெரிய ஆரவாரமா கொண்டாடினாங்க தெரியுமா! பக்கத்து ஊர்கள்ல இருந்து மக்கள் கார், வேன்ல கிளம்பி வந்து அவரை அப்போ கொண்டாடினாங்க.

Puliyankulam Kannan
பைசன் படத்தில்

அவருடைய மேட்ச்னாலே ரொம்ப பயங்கரமா இருக்கும். நானும் சின்ன வயசுல இருந்தே கபடி ஆடுவேன். எங்க ஏரியாவுல எல்லா பசங்களும் 5-ம் கிளாஸ் படிக்கும்போதிருந்து விளையாட ஆரம்பிச்சுடுவாங்க.” என்றார்.

” ‘பைசன்’-ல பெரிய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அதனால இப்போ அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளும் வந்துட்டு இருக்கு. மாரி செல்வராஜ் தம்பியும் மற்ற படங்கள்ல நடிக்கச் சொல்லியிருக்காப்ல.” என்றார் மகிழ்ச்சியுடன்.

“துருவ் விக்ரமுக்கு சென்னைக்கு வந்து முதல்ல சில நாட்கள் பிராக்டீஸ் தந்தோம். பிறகு இங்க வந்தும் அவர் பயிற்சி எடுத்துக்கிட்டாரு. ரொம்ப நாள் இங்க தங்கியிருந்தாப்ல.

அவருக்கு இங்கு நிறைய முக்கியமான பிராக்டீஸ் நடந்துச்சு. கிராமத்துல மக்கள் எப்படி இருப்பாங்களோ அதை டக்குனு அவங்க புரிஞ்சு கத்துக்கிட்டாங்க. நல்ல ஒத்துழைப்பும் கொடுத்தாரு.

நாங்க செய்யுற விஷயங்கள் எல்லாத்தையும் உடனடியாக கத்துக்கிட்டு பண்ணினாரு. ரொம்ப சீக்கிரமா, அனுபமாவும் வயல்ல இறங்கி களை பறிக்கவும் கத்துக்கிட்டாங்க. சொல்லப்போனா, நான் முதல்ல நடிக்க வருவேன்னு நினைக்கல. தம்பினாலதான் இந்த விஷயமெல்லாம் நடந்துச்சு.

Puliyankulam Kannan
Puliyankulam Kannan

‘பைசன்’ படத்துல இருக்கிற மாதிரி பெரிய கேரக்டர்ல நடிப்பேன்னு துளியும் எதிர்பார்க்கல.” என்றவரிடம் “‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு முன்னாடி கண்ணன் என்பவர் யார்?” எனக் கேட்டோம்.

கேள்விக்கு பதில் தந்தவர், “‘பரியேறும் பெருமாள்’தான் எங்க வாழ்க்கையோட திருப்புமுனை. அதுக்கு முன்னாடி விவசாயம் பாத்துட்டு இருந்தேன். வாழைக்காய் சுமக்குற லோடு மேன் வேலைக்கும் போயிட்டிருந்தேன்.

வேலை நேரத்துல வேலையைப் பார்ப்போம். மத்த நேரத்துல பசங்களோட விளையாடுவோம். இப்படிதான் நான் முன்னாடி இருந்திட்டிருந்தேன்.

மாரி செல்வராஜ் இல்லைனா எங்க வாழ்க்கை என்னாகியிருக்கும் தெரியல. உண்மையைச் சொல்லணும்னா, நான் முன்னாடி குடிகாரனா சுத்திட்டு இருந்தேன். தம்பி படம் எடுக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகுதான் எனக்கு புது வாழ்க்கைக்கு பொறந்துச்சு.

தம்பிதான் என்னை நல்வழியில கூட்டிப் போனாரு. இல்லைனா நான் என்ன கண்டிஷன்ல இருந்திருப்பேன்னு தெரியல. இங்க ஊர்ல இருக்கிற எங்களுக்கு சினிமாங்கிறது மாயை மாதிரிதான் இருக்கும்.

சின்ன வயசுல நாங்க ரஜினி, கமல் படத்தை விரும்பிப் பார்ப்போம். நாங்க இந்தப் பக்கம் அவங்களோட தீவிர ரசிகரா இருப்போம். அங்குட்டு மாரி தம்பி விஜய்யோட தீவிர ரசிகரா இருப்பாப்ல.

Puliyankulam Kannan
Puliyankulam Kannan

அப்படி பார்த்து வந்த நாங்க இன்னைக்கு சினிமாவுல நடிக்கிறோம்ங்கிறதே பெரிய சந்தோஷம். நாங்க வியந்து பார்த்த ரஜினி, கமல் இன்னைக்கு நான் நடிக்கிறதைப் பார்க்கிறார்ங்கிறதே பெரிய விஷயம்.

மாரி தம்பியோட ஒவ்வொரு படத்துலயும் பெரிய பெரிய நடிகர்களெல்லாம் நடிக்கிறாங்க. இப்போ ‘பைசன்’ படத்துல பசுபதி சார், அமீர் சார்லாம் நடிச்சிருக்காரு. அவங்கலாம் ரொம்ப பெரிய ஆட்கள். அவங்க முன்னாடி, அவங்ககூட நடிக்கிறதெல்லாம் கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு.

ஆனா, அவங்கதான் எங்களுக்கு தைரியம் கொடுத்து நடிக்க வச்சாங்க. பசுபதி சார்லாம் ‘பயப்படாம நடிங்க’ன்னு தெம்பு கொடுத்தாரு.

அப்படிதான் இந்தப் பெரிய கேரக்டர்ல நடிச்சேன். அந்தக் கேரக்டரைப் பார்த்துட்டு சில படங்கள்ல நடிக்கவும் கூப்பிடுறாங்க. அடுத்தடுத்து நடிக்கவும் தயாராகிட்டு இருக்கேன். பார்ப்போம்!” என உற்சாகத்துடன் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நேர்மை மிக முக்கியமான ஒன்று"- `வா வாத்தியார்' படம் குறித்து ஆறுமுகக்குமார் | “Integrity is a very important thing” – Arumugakumar on the film Vaa Vaathiyaar

🚀 “நேர்மை மிக முக்கியமான ஒன்று”- `வா வாத்தியார்’ படம் குறித்து ஆறுமுகக்குமார் | “Integrity is a very important thing” – Arumugakumar on the film Vaa Vaathiyaar

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர்…

"மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" - பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

⚡ "மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" – பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஏ.ஆர் 2 ரஹ்மான் பிபிசி ஏசியன் நெட்வொர்க் ஊடகத்திற்குப்…

மகாராஷ்டிரா: கடற்கரை நகரில் ரூ.37.9 கோடிக்கு 5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள விராட் கோலி-அனுஷ்கா தம்பதி | Virat Kohli and Anushka Sharma buy 5 acres of land for Rs. 37.9 crore in a Maharashtra coastal town alibag

💡 மகாராஷ்டிரா: கடற்கரை நகரில் ரூ.37.9 கோடிக்கு 5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள விராட் கோலி-அனுஷ்கா தம்பதி | Virat Kohli and Anushka Sharma buy 5 acres of land for Rs. 37.9 crore in a Maharashtra coastal town alibag

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து…