Late Dharmendra’s ashes immersed, wife Hema Malini sidelined by sons at prayer meeting-மறைந்த தர்மேந்திராவின் அஸ்தி கரைப்பு, பிரார்த்தனை கூட்டத்தில் மனைவி ஹேமாமாலினியை ஓரங்கட்டிய மகன்கள்

✍️ |
Late Dharmendra's ashes immersed, wife Hema Malini sidelined by sons at prayer meeting-மறைந்த தர்மேந்திராவின் அஸ்தி கரைப்பு, பிரார்த்தனை கூட்டத்தில் மனைவி ஹேமாமாலினியை ஓரங்கட்டிய மகன்கள்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் காலமானார்

2
அவரின் இறுதிச்சடங்கு அவசர அவசரமாக செய்யப்பட்டது

3
அவரது உடல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவில்லை

4
இறுதிச்சடங்கு முடிந்த பிறகு தர்மேந்திராவிற்கு அவரது முதல் மனைவியின் குடும்பத்தினர் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தபோது அதில் ஹேமாமாலினி அல்லது அவரது மகள்கள் கலந்து கொள்ளவில்லை

5
ஹேமாமாலினி தனது வீட்டில் இதற்காக தனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்


பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் காலமானார். அவரின் இறுதிச்சடங்கு அவசர அவசரமாக செய்யப்பட்டது. அவரது உடல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவில்லை. இறுதிச்சடங்கு முடிந்த பிறகு தர்மேந்திராவிற்கு அவரது முதல் மனைவியின் குடும்பத்தினர் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தபோது அதில் ஹேமாமாலினி அல்லது அவரது மகள்கள் கலந்து கொள்ளவில்லை. ஹேமாமாலினி தனது வீட்டில் இதற்காக தனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

தற்போது தர்மேந்திராவின் அஸ்தி ஹரித்வாரில் உள்ள கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தர்மேந்திராவின் மகன்கள் சன்னி தியோல், கரன் தியோல், பாபி தியோல் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி ஹேமாமாலினி மற்றும் அவரது இரண்டு மகள்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அஸ்தி கரைப்பை வீடியோ எடுக்க முயன்ற புகைப்படக்காரர்களுடன் சன்னி தியோல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு புகைப்பட கலைஞரிடம் கேமராவை பிடுங்கிய சன்னி தியோல், எவ்வளவு பணம் வேண்டும் சொல் தருகிறேன் என்று கோபத்தில் பேசினார். இதே போன்று தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு அழைத்து வந்தபோதும், மும்பை வீட்டிற்கு வெளியில் ஏராளமான புகைப்பட கலைஞர்கள் கூடி நின்றனர். அவர்களிடம் சன்னி தியோல் கறாராக நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தர்மேந்திராவின் இறுதிச்சடங்கு, அஸ்தி கரைப்பில் ஹேமாமாலினியும், அவரது மகள்களையும் தர்மேந்திராவின் குடும்பத்தினர் தவிர்த்தது இரு குடும்பத்திற்கிடையே பகை இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. ஹேமாமாலினியை திருமணம் செய்த பிறகு தனது முதல் மனைவியின் வீட்டிற்கு செல்வதை தர்மேந்திரா தவிர்த்தார்.

ஆனால் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் தர்மேந்திரா தனது முதல் மனைவியின் இல்லத்திற்கு சென்றார். தர்மேந்திராவிற்கு புனே அருகில் 100 ஏக்கரில் பண்ணை வீடு இருக்கிறது. இனி இந்த சொத்துக்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக குடும்பத்தினரிடையே மோதல் ஏற்படலாம் என்கிறார்கள் இரு குடும்பத்துக்கும் நெருக்கமான சிலர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி - விதார்த் காம்போ?! | kuttram purindhavan sony liv web series review tamil pasupathy vidharth

Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி – விதார்த் காம்போ?! | kuttram purindhavan sony liv web series review tamil pasupathy vidharth

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பேரனுக்காகத் துடிக்கும் தாத்தாவாக, குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கலங்குபவராகக் கதாபாத்திரம்…

அங்கம்மாள் விமர்சனம்: கீதா கைலாசம், சரண் சக்தி, கல்லூரி பரணி நடிப்பில் அங்கம்மாள் படம் எப்படி இருக்கு? | Angammal Review: How is Angammal movie starring Geetha Kailasam Saran Shakthi, and kalloori Bharani?

அங்கம்மாள் விமர்சனம்: கீதா கைலாசம், சரண் சக்தி, கல்லூரி பரணி நடிப்பில் அங்கம்மாள் படம் எப்படி இருக்கு? | Angammal Review: How is Angammal movie starring Geetha Kailasam Saran Shakthi, and kalloori Bharani?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காத தாயின் நிழலில் தஞ்சம் கொண்ட…