நீண்டநாள் கனவு பயணம்… புண்ணிய தலங்களுக்கு அழைத்துச் சென்ற அரசுக்கு நன்றி ! | ஆன்மிகம்

✍️ |
HYP 5621813 cropped 05122025 194518 img 20251205 165607 waterm 2 3x2 Thedalweb நீண்டநாள் கனவு பயணம்... புண்ணிய தலங்களுக்கு அழைத்துச் சென்ற அரசுக்கு நன்றி ! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 06, 2025 10:55 AM ISTராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் இலவசமாக புனித பயணம் செல்ல அழைத்து செல்லப்பட்டது

2
இதில் 20 மண்டலங்களைச் சேர்ந்த 600 பக்தர்கள் பயணம் மேற்கொண்டனர்.+ ராமேஸ்வரம் – காசிக்கு புனித பயணம்.தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 60-வயதிற்கு மேல் உள்ள பக்தர்களை ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு இலவசமாக ஆன்மீகப் பயணம் அழைத்து செல்லப்பட்டு வருகிறது

3
இந்தாண்டுக்கான அறிவிப்பானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி போன்ற 20 மண்டலத்தைச் சேர்ந்த 600 பக்தர்கள்


Last Updated:

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் இலவசமாக புனித பயணம் செல்ல அழைத்து செல்லப்பட்டது. இதில் 20 மண்டலங்களைச் சேர்ந்த 600 பக்தர்கள் பயணம் மேற்கொண்டனர்.

Rapid Read
+

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் – காசிக்கு புனித பயணம்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 60-வயதிற்கு மேல் உள்ள பக்தர்களை ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு இலவசமாக ஆன்மீகப் பயணம் அழைத்து செல்லப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான அறிவிப்பானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி போன்ற 20 மண்டலத்தைச் சேர்ந்த 600 பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்துவிட்டு காசிக்கு செல்லும் சிறப்பு ரயிலில் புறப்பட்டு சென்றனர்.

ஆறு நாட்கள் பயணத்தில் காசியை முடித்து விட்டு டிசம்பர் 11-ம் தேதி மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாதசுவாமி கோவில் தரிசனம் செய்துவிட்டு பயணத்தை நிறைவு செய்து விட்டு தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வார்கள்.

இதுகுறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த பக்தர் ஜோதி கூறுகையில், இந்து அறநிலையத்துறையின் மூலம் அறிவிப்பு வெளியிட்டதை பார்த்து விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டு, டிசம்பர்-4 ராமேஸ்வரம் வந்து காலை கடலில் நீராடி, 22 தீர்த்த கிணறில் நீராடி சுவாமி தரிசனம் செய்து காசிக்கு சென்று அங்கு காசி விஸ்வநாதர் தரிசித்தி மீண்டும் ராமேஸ்வரம் வந்து விடுவோம்.

இதுவரையிலும் காசிக்கு செல்லவில்லை. ராமேஸ்வரம் – காசி செல்வது நீண்டநாள் கனவாக இருந்தது. தற்போது தமிழக அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் இலவசமாக அழைத்துச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. எனவே அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்