முதியவர்களின் ஆன்மிக பயணத் திட்டம்… தமிழக அரசு ரூ.9.90 கோடி செலவு – அமைச்சர் தகவல்! | ஆன்மிகம்

✍️ |
Sekar babu 2025 12 d3e5e7ae2e6ab6284cc4ee3fc91ec121 3x2 Thedalweb முதியவர்களின் ஆன்மிக பயணத் திட்டம்... தமிழக அரசு ரூ.9.90 கோடி செலவு - அமைச்சர் தகவல்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 06, 2025 3:39 PM ISTதமிழக அரசு ராமேஸ்வரம்-காசி ஆன்மிக பயணத் திட்டத்தில் ரூ.9.90 கோடி செலவு செய்தது, 11353 முதியோர் பயனடைந்தனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.News18ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண்பது மட்டுமல்ல.

2
மூத்தவர்கள் சிரிப்பிலும் இறைவனைக் காண்பதுதான் தி.மு.க

3
அரசு என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ள, ஏழை எளிய முதியோர்களுக்காக ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது

4
அதன்படி, இந்த ஆண்டு 602 பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிகப் பயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.இந்த ரயில் சனிக்கிழமை காலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது

5
அங்கு அமைச்சர் சேகர்பாபு பக்தர்களை வரவேற்று காசிக்கு வழியனுப்பி வைத்தார்.


Last Updated:

தமிழக அரசு ராமேஸ்வரம்-காசி ஆன்மிக பயணத் திட்டத்தில் ரூ.9.90 கோடி செலவு செய்தது, 11353 முதியோர் பயனடைந்தனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Rapid Read
News18
News18

ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண்பது மட்டுமல்ல.. மூத்தவர்கள் சிரிப்பிலும் இறைவனைக் காண்பதுதான் தி.மு.க. அரசு என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ள, ஏழை எளிய முதியோர்களுக்காக ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு 602 பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிகப் பயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.

இந்த ரயில் சனிக்கிழமை காலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு அமைச்சர் சேகர்பாபு பக்தர்களை வரவேற்று காசிக்கு வழியனுப்பி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை, எளிய முதியவர்களின் ஆன்மிக பயணத் திட்டத்திற்காக இதுவரை 9 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவழித்திருப்பதாகவும், இதன்மூலம் 11 ஆயிரத்து 353 பேர் பயனடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ராஜராஜ சோழன் போல 500 ஆண்டுகள் கழித்தும் ஆன்மிகத்தில் முதலிடம் வகித்த முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் திகழ்வார் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

முன்னதாக, இதே செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விரிவாகப் பேசினார். அப்போது திருவண்ணாமலை தீபத்துடன் திருப்பரங்குன்றம் விவகாரத்தை ஒப்பிட்டு அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பினார். “திருவண்ணாமலை மலையின் உச்சியில் தீபம் ஏற்றிய பின், மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா? அதுபோல்தான் திருப்பரங்குன்றத்திலும் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு? 350 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் மலையின் உச்சத்தில் தீபம் ஏற்றுகிறார்கள். அதற்குப் பதிலாக வேறு ஐந்து இடத்தில் தீபம் ஏற்றினால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அது போன்றதுதான் திருப்பரங்குன்றத்தில் நடைபெறுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

“தி.மு.க. எல்லோருக்குமான அரசு. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் பிரிவினை என்ற சொல்லே எடுபடாது என்றும், பிரிவினை சக்திகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்துவார் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். “பக்தியை வைத்துப் பகை வளர்க்கக் கூடாது. சமாதானம் என்பதுதான் இறைக் கொள்கை; சனாதானம் அல்ல இறைக் கொள்கை. போதிய அமைதியை ஏற்படுத்தித் தருவதுதான் இந்த ஆட்சியின் கொள்கை லட்சியம். இது ராமானுஜர் வாழ்ந்த மண்,” என்று அவர் கூறினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்