📌 “'சம்பவக்காரன்' சசி; இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" – இயக்குநர் பாலா எழுதிய கடிதம்

✍️ |
``'சம்பவக்காரன்' சசி; இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" - இயக்குநர் பாலா எழுதிய கடிதம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் சசிகுமார் வென்றிருந்தார்

2
இந்நிலையில் சசிகுமாரை பாராட்டி இயக்குநர் பாலா கைப்பட கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்

3
அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், " சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்கு நீ சிறந்த விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் வெளிப்பாடுதான் இந்தக் கடிதம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இயக்குநர் பாலாகடந்த 25 வருடங்களாக உன்னை பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன்

5
பேராற்றல் கொண்டவன்

📌 சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் சசிகுமார் வென்றிருந்தார். இந்நிலையில் சசிகுமாரை பாராட்டி இயக்குநர் பாலா கைப்பட கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார். அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ” சென்னை…


சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் சசிகுமார் வென்றிருந்தார்.

இந்நிலையில் சசிகுமாரை பாராட்டி இயக்குநர் பாலா கைப்பட கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்.

அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ” சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு நீ சிறந்த விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் வெளிப்பாடுதான் இந்தக் கடிதம்.

இயக்குநர் பாலா
இயக்குநர் பாலா

கடந்த 25 வருடங்களாக உன்னை பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன். பேராற்றல் கொண்டவன்.

கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை அதைச் சகலருக்கும் கடத்தும் உன் உள்ளன்பை நேரில் மட்டுமல்ல திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன்.

பல ரசிகர்களில் நானும் ஒருவனாக.!

உன் இயல்பான எளிமைக்கு இருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.

இறுதியாக, உனக்குள் உறுமிக் கொண்டிருக்கிற அந்தச் ‘சம்பவக்காரன்’ சசியை, என் இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

சசிகுமார்
சசிகுமார்

என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன்” என்று பாராட்டி எழுதியிருக்கிறார்.

இந்த கடிதத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சசிகுமார், ” தேசிய (விருது) அங்கீகாரம் தந்த பாலா அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி…

உங்கள் ஆசையை சீக்கிரமே நிவர்த்தி செய்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்திருக்கிறார்.





Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல"- கமல்ஹாசன் | “Today is KB sir’s death anniversary. And even this day is no exception” – Kamal Haasan

✅ “இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல”- கமல்ஹாசன் | “Today is KB sir’s death anniversary. And even this day is no exception” – Kamal Haasan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்…

"விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன்!" - எஸ்.ஏ. சந்திரசேகர் | "I think Vijay also wanted it!" - S.A. Chandrasekhar

📌 “விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன்!” – எஸ்.ஏ. சந்திரசேகர் | “I think Vijay also wanted it!” – S.A. Chandrasekhar

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் எஸ்.ஏ.சி பேசும்போது, "பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரை என்னுடைய மானசீக…