📌 கிறிஸ்துமஸ் டெக்கரேஷனுக்கு லட்சங்களில் செலவு… குமரியின் பிரம்மாண்ட கொண்டாட்ட பின்னணி… | ஆன்மிகம்

✍️ |
HYP 5656300 cropped 22122025 171217 inshot 20251222 171157547 1 3x2 Thedalweb கிறிஸ்துமஸ் டெக்கரேஷனுக்கு லட்சங்களில் செலவு... குமரியின் பிரம்மாண்ட கொண்டாட்ட பின்னணி... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை மகிழ்ச்சியும், பக்தியும் கலந்து கொண்டாடப்படுகிறது

2
கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், நள்ளிரவு திருப்பலி நடைபெறும்

3
வீடுகள் மற்றும் தேவாலயங்களில் நட்சத்திர விளக்குகள், கிறிஸ்துமஸ் மரம், குடில்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்படுகின்றன
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கேக், இனிப்புகள் பகிர்ந்து, அன்பும் ஒற்றுமையும் வெளிப்படுத்தப்படுகிறது.பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் என்பது டிசம்பர் மாத துவக்கத்திலேயே தொடங்கி விடுகிறது

5
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வீடுகளிலும், தேவாலயங்களிலும் நட்சத்திர விளக்குகள், கிறிஸ்துமஸ் மரம், குடில்கள் அமைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டினாலும் அனைத்து இடங்களிலும் பிரம்மாண்டமாகவும் பல லட்ச ரூபாய் செலவழித்தும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதில்லை.ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது ஒவ்வொரு வீடுகளிலும் மற்றும் தேவாலயங்களிலும் பல லட்ச ரூபாய்

📌 தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை மகிழ்ச்சியும், பக்தியும் கலந்து கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், நள்ளிரவு திருப்பலி நடைபெறும். வீடுகள் மற்றும் தேவாலயங்களில் நட்சத்திர விளக்குகள், கிறிஸ்துமஸ் மரம், குடில்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்படுகின்றன. கேக்,…


தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை மகிழ்ச்சியும், பக்தியும் கலந்து கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், நள்ளிரவு திருப்பலி நடைபெறும். வீடுகள் மற்றும் தேவாலயங்களில் நட்சத்திர விளக்குகள், கிறிஸ்துமஸ் மரம், குடில்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்படுகின்றன. கேக், இனிப்புகள் பகிர்ந்து, அன்பும் ஒற்றுமையும் வெளிப்படுத்தப்படுகிறது.

பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் என்பது டிசம்பர் மாத துவக்கத்திலேயே தொடங்கி விடுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வீடுகளிலும், தேவாலயங்களிலும் நட்சத்திர விளக்குகள், கிறிஸ்துமஸ் மரம், குடில்கள் அமைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டினாலும் அனைத்து இடங்களிலும் பிரம்மாண்டமாகவும் பல லட்ச ரூபாய் செலவழித்தும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதில்லை.

ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது ஒவ்வொரு வீடுகளிலும் மற்றும் தேவாலயங்களிலும் பல லட்ச ரூபாய் செலவழித்து நட்சத்திர விளக்குகள், கிறிஸ்துமஸ் மரம், குடில்கள் அமைத்து கொண்டாடப்படுகிறது.

இந்த பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் குறித்தும் அதன் தனித்துவம் குறித்தும் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த சதீஷ் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மத அடிப்படையில் இல்லாமல் அனைவரும் ஒன்றாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

பொதுவாக மத அடிப்படையில் இல்லாமல் அனைத்து வீடுகளிலும் குழந்தைகள் விருப்பப்படி ஸ்டார்கள் தொங்க விடுவார்கள். இதுவே நாளடைவில் வளர்ந்து பின்னர் சிறிய வீடுகளில் சிறிய அளவில் குடில் கட்டத் தொடங்கி அது வளர தொடங்கியது. பின்னர் அனைத்து ஊர்களிலும் பொது இடங்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறிய அளவில் குடில் கட்டத் தொடங்கினார்கள். அது நாளடைவில் வளர்ந்து மிகப்பெரிய அளவில் குடில் கட்டத் தொடக்கமாக அமைந்தது.

தற்போது பார்த்தோமானால் கடந்த சில ஆண்டுகளாகவே பாலப்பள்ளத்தில் அமைக்கப்படும் பிரம்மாண்ட குடில்கள் அனைத்துத் தரப்பினரையும் கவனிக்க வைக்கிறது. இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் பிரம்மாண்டமாக குடில்கள் கட்டத் தொடங்கி வருகிறார்கள்.

ஒரு ஊரை பார்த்து மற்ற ஊர்க்காரர்களும் குடில்கள் கட்டத் தொடங்கி வருவது தற்போது வழக்கமாகிவிட்டது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொன்று தொட்ட நிகழ்வு போல் மாறிவிட்டது. முன்பெல்லாம் வீடுகளில் சிறிய அளவில் ஸ்டார் தொங்கவிட்டு குடில்கள் அமைத்து லைட் போடப்படும். தற்போது தொழில்நுட்பம் வளர வளர ஊர்களில் தேவாலயங்களில் மற்றும் வீடுகளில் அதற்கு ஏற்றார் போல் குடில்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

முன்பெல்லாம் இதே போன்று குடில்கள் கிடையாது. வீடுகளில் மட்டுமே வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவார்கள். அது நாளடைவில் ஒரு கொண்டாட்டம் போல மாறிவிட்டது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் குடில்களை காண வருவது ஒரு என்டர்டைன்மென்ட் போல ஆகிவிட்டது.

தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை தினத்தில் பாலப்பள்ளத்தில் அமைக்கப்படும் பிரம்மாண்ட குடில்களை பார்க்க வருவது, அப்படியே பல்வேறு ஊர்களில் இருக்கும் குடில்களை பார்ப்பது, மேலும் சர்ச்சுகளில் அமைக்கப்படும் பிரம்மாண்ட லைட்டுகளை காண்பது இதெல்லாம் ஒரு என்டர்டைன்மென்ட் போல ஆகிவிட்டது.

மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இது போன்ற அமைக்கப்படும் பிரம்மாண்ட குடில்களை குழந்தைகளோடு வந்து கண்டு களிப்பது சிறந்த பொழுதுபோக்கு வாடிக்கையாகிவிட்டது.

மேலும் தற்போது இந்த குடில்களுக்கு அருகில் பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இது தற்காலிக கடை அமைக்கும் வியாபாரிகளுக்கு ஒரு நல்ல வருவாய் ஈட்டவும் உதவிகரமாக அமைகிறது” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தமிழ் செய்திகள்/ஆன்மிகம்/

Grand Christmas Celebration: கிறிஸ்துமஸ் டெக்கரேஷனுக்கு லட்சங்களில் செலவு… குமரியின் பிரம்மாண்ட கொண்டாட்ட பின்னணி…



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்