🚀 70 அடி உயரம்… அரண்மனை ஸ்டைலில் ரெடியான குடில்… பிரம்மாண்டமாய் ஈர்க்கும் பாலப்பள்ளம்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5657588 cropped 23122025 112517 inshot 20251223 112447802 2 3x2 Thedalweb 70 அடி உயரம்... அரண்மனை ஸ்டைலில் ரெடியான குடில்... பிரம்மாண்டமாய் ஈர்க்கும் பாலப்பள்ளம்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 23, 2025 3:19 PM ISTPalappallam Kudil: இந்த ஆண்டு பாலப்பள்ளத்தில் 70 அடி உயரத்திலும் 80 அடி அகலத்திலும் மூன்று தளங்களுடன் ஏரோது அரண்மனை (Herod's Palace) போன்று அமைக்கப்பட்டுள்ளது.+ 70 அடி உயரம்..

2
அரண்மனை ஸ்டைலில் ரெடியான குடில்..

3
பிரம்மாண்டமாய் ஈர்க்கும் பாலப்பள்ளம்…இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடுகிறார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
2025 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை நிலையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காகத் தயாராகி வருகிறார்கள்.இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வீடுகள் மற்றும் தேவாலயங்களில் குடில்கள் கட்டுவது, வண்ண விளக்குகளால் அலங்கரித்து ஸ்டார்கள் தொங்க விடுவது போன்ற பல்வேறு பணிகளில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.குமரி

📌 Last Updated:Dec 23, 2025 3:19 PM ISTPalappallam Kudil: இந்த ஆண்டு பாலப்பள்ளத்தில் 70 அடி உயரத்திலும் 80 அடி அகலத்திலும் மூன்று தளங்களுடன் ஏரோது அரண்மனை (Herod’s Palace) போன்று அமைக்கப்பட்டுள்ளது.+ 70 அடி…


Last Updated:

Palappallam Kudil: இந்த ஆண்டு பாலப்பள்ளத்தில் 70 அடி உயரத்திலும் 80 அடி அகலத்திலும் மூன்று தளங்களுடன் ஏரோது அரண்மனை (Herod’s Palace) போன்று அமைக்கப்பட்டுள்ளது.

+

70

70 அடி உயரம்… அரண்மனை ஸ்டைலில் ரெடியான குடில்… பிரம்மாண்டமாய் ஈர்க்கும் பாலப்பள்ளம்…

இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடுகிறார்கள். 2025 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை நிலையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காகத் தயாராகி வருகிறார்கள்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வீடுகள் மற்றும் தேவாலயங்களில் குடில்கள் கட்டுவது, வண்ண விளக்குகளால் அலங்கரித்து ஸ்டார்கள் தொங்க விடுவது போன்ற பல்வேறு பணிகளில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கிறிஸ்துமஸ் பண்டிகை பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட குடில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல லட்சம் செலவில் கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளத்தில் சினிமா செட் போன்று பிரம்மாண்ட குடில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பல ஆண்டுகளாகக் குடில்கள் அமைத்து வரும் அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஹெல்டன் செல்வகுமார் கூறுகையில், “நாங்கள் கடந்த 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து குடில்கள் அமைத்து வருகிறோம். இந்த வருடம் தொடர்ந்து 28வது ஆண்டாகக் குடில் அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆண்டில் 70 அடி உயரத்திலும் 80 அடி அகலத்திலும் மூன்று தளங்களுடன் ஏரோது அரண்மனை (Herod’s Palace) போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிலில் ஏரோது ராஜாவின் வரலாறு மற்றும் மாளிகையின் சிறப்புகள் பற்றி தெரிவிக்கும் வகையில் அமைத்துள்ளோம். இதை அனைவரும் எளிதில் அறியும் வண்ணம் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அமைத்துள்ளோம்.

மேலும் வளரும் குழந்தைகளுக்கு கிறிஸ்தவத்தைப் பற்றி தெரிவிப்பதற்காகவும் அவர்கள் எளிதில் அறிந்து கொள்வதற்காகவும் அவற்றை எளிமையான முறையில் காட்சிப்படுத்தி எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைத்துள்ளோம். இந்த குடில் பொதுமக்களின் பார்வைக்காக 23 அன்று மாலை 7 மணி அளவில் திறக்கப்படுகிறது. இதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் ஆசிய அளவில் முதன்முதலாக இங்குதான் பயன்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5656300 cropped 22122025 171217 inshot 20251222 171157547 1 3x2 Thedalweb கிறிஸ்துமஸ் டெக்கரேஷனுக்கு லட்சங்களில் செலவு... குமரியின் பிரம்மாண்ட கொண்டாட்ட பின்னணி... | ஆன்மிகம்

💡 கிறிஸ்துமஸ் டெக்கரேஷனுக்கு லட்சங்களில் செலவு… குமரியின் பிரம்மாண்ட கொண்டாட்ட பின்னணி… | ஆன்மிகம்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை மகிழ்ச்சியும், பக்தியும் கலந்து கொண்டாடப்படுகிறது 2…