📌 மனித குலத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகை சொல்லும் சேதி… ஓவிய ஆசிரியரின் உயிரோட்டமான குடில்.. | ஆன்மிகம்

✍️ |
HYP 5658758 cropped 23122025 183000 20251223 182707 0000 water 2 3x2 Thedalweb மனித குலத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகை சொல்லும் சேதி... ஓவிய ஆசிரியரின் உயிரோட்டமான குடில்.. | ஆன்மிகம்
📌 தூத்துக்குடியில் ஆசிரியர் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையின் உண்மையான மனிதநேயச் செய்தியை சமூகத்திற்குள் கொண்டு செல்லும் வகையில், அனைத்து உயிர்களும் இறைவன் படைப்பில் சமம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு தனித்துவமான இயேசு பாலகன் குடில் அமைத்துள்ளார்.ஒவ்வொரு…


தூத்துக்குடியில் ஆசிரியர் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையின் உண்மையான மனிதநேயச் செய்தியை சமூகத்திற்குள் கொண்டு செல்லும் வகையில், அனைத்து உயிர்களும் இறைவன் படைப்பில் சமம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு தனித்துவமான இயேசு பாலகன் குடில் அமைத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சமூகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் நடப்பு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, தனித்துவமான கருப்பொருள்களில் குடில் அமைப்பதே தூத்துக்குடியைச் சேர்ந்த ரிட்டயர்ட் கலை ஆசிரியரான இசிடோர் பெர்னாண்டோவின் சிறப்பம்சமாக இருந்து வருகிறது.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

அந்த வகையில் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் குடிலில் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்ட அவருடைய ஓவியங்களைச் சேர்த்து வடிவமைத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு வயநாடு துயர நிகழ்வைக் கண்டு மாதா கலங்குவது போல் வடிவமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கலை ஆசிரியர் இசிடோர் பெர்னாண்டோ கூறுகையில், “இறைவனின் மேலான அருளால், எங்கள் வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை எடுத்துச் சொல்லும் நோக்கில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களுடன் இயேசு பாலகனின் குடிலை அமைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டுகளில் புவியைப் பாதுகாப்போம், இயற்கையை நேசிப்போம், தீவிரவாதத்தை ஒழிப்போம், உலக சமாதானத்தைக் காப்போம், கலைவழி இறைமொழியை வளர்ப்போம், தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்போம் போன்ற பல்வேறு ஆக்க சிந்தனைகளை முன்வைத்து குடில்கள் வடிவமைக்கப்பட்டன.

இறைவனால் படைக்கப்பட்ட இந்த உலகம் மனிதர்களுக்கே மட்டும் அல்ல, விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள், சிறு பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது என்ற உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்லவே இந்த ஆண்டின் குடில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மனிதர்களுக்கு இருப்பதைப் போலவே உணர்வுகள் அனைத்து உயிர்களுக்கும் உள்ளன என்பதையும், ஒவ்வொரு உயிரினமும் தங்களுக்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டு இந்த உலகில் வாழ்கின்றன என்பதையும் அவர் விளக்கினார்.

மேலும், மனிதர்கள் மட்டுமே இறைவனை ஆராதிக்க வேண்டும், இறைவன் நம்மை மட்டுமே உயர்வாகப் படைத்துள்ளார் என்ற தவறான புரிதலின் காரணமாக, பிற உயிர்களை மதிக்கத் தவறுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த எண்ணப்போக்கை மாற்றி, எல்லா உயிர்களும் இறைவன் படைப்பில் சமம் என்ற உண்மையை உணர வைப்பதே இந்த ஆண்டின் குடிலின் மையக் கருத்தாகும் என்றார்.

இந்த சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில், விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் சிறு பூச்சிகளை மாதிரிகளாகக் கொண்டு, இயேசு பாலகன் பிறந்த குடிலின் பின்னணியில் அமைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து உயிர்களும் இறை இயேசு பாலகனைத் தரிசிக்க வந்தால் எவ்வாறு இருக்கும் என்ற கற்பனையின் அடிப்படையில் இந்த குடில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதைக் காண வரும் மக்களின் மனதில் அனைத்து உயிர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற உண்மையை விதைத்து, இயற்கையைப் பாதுகாக்கும் எண்ணத்தை வளர்ப்பதே இதன் நோக்கம்” என்று தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…