🚀 Newyear Rasi Palan | 2026-ல் பல ட்விஸ்ட்.. எதிர்பாராத பணவரவு.. 12 ராசிக்குமான புத்தாண்டு ராசிபலன் இதோ! | ஆன்மிகம்

✍️ |
Rasi palan 3 2025 12 19a556598da4bd444a6937996b083e45 3x2 Thedalweb Newyear Rasi Palan | 2026-ல் பல ட்விஸ்ட்.. எதிர்பாராத பணவரவு.. 12 ராசிக்குமான புத்தாண்டு ராசிபலன் இதோ! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மேஷம்:ஏற்றமும் மாற்றமும் ஏற்படக் கூடிய ஆண்டு இது

2
அதேசமயம், எதிலும் திட்டமிடலும், சோம்பலின்மையும் அவசியம்

3
அலுவலகத்தில் உங்கள் பெருமை பேசப்படும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும்

5
பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேர்க்கும்

📌 மேஷம்:ஏற்றமும் மாற்றமும் ஏற்படக் கூடிய ஆண்டு இது. அதேசமயம், எதிலும் திட்டமிடலும், சோம்பலின்மையும் அவசியம். அலுவலகத்தில் உங்கள் பெருமை பேசப்படும். மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேர்க்கும். பேச்சுக்கு மதிப்பு கூடும். எதிலும்…


மேஷம்:

ஏற்றமும் மாற்றமும் ஏற்படக் கூடிய ஆண்டு இது. அதேசமயம், எதிலும் திட்டமிடலும், சோம்பலின்மையும் அவசியம். அலுவலகத்தில் உங்கள் பெருமை பேசப்படும். மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேர்க்கும். பேச்சுக்கு மதிப்பு கூடும். எதிலும் குறிப்புகள் எடுத்து வைப்பது மறதியை தவிர்க்க உதவும்.

ரிஷபம்:

சங்கடம் குறைந்து சாதகங்கள் அதிகரிக்கக் கூடிய ஆண்டு. எதிலும் முழு முயற்சியும் நேரம் தவறாமையும் இருந்தால், நன்மைகள் தொடர்ந்து வரும். அலுவலகத்தில் நீங்கள் திறமையால் முன்னேற்றங்களைக் காணலாம். உயரதிகாரிகளிடம் பேசும்போது தர்க்கத்தைவிட தன்னடக்கமே நல்லது.

மிதுனம்:

முயற்சிகளால் முன்னேற வேண்டிய ஆண்டு. எந்த சமயத்திலும் அலட்சியமும் அவசரமும் மட்டும் கூடவே கூடாது. அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். எதிர்பாராத வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்றிடுங்கள். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடாது.

கடகம்:

மனதில் இருந்த பயம் நீங்கி, தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் ஆண்டு. மனதை ஒரு நிலைப்படுத்தி,கவனச் சிதறல் தவிர்த்து கடமை உணர்ந்து செயல்பட்டால், உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற உயர்வுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும்.

சிம்மம்:

திட்டமிட்டுச் செயல்பட்டால், தொடர்ச்சியாக நல்லவை நடக்கும் ஆண்டு. சோம்பல் தவிர்ப்பதும், நேரடி கவனமும் உயர்வுகளைத் தொடர்ச்சியாகக் கிட்டச் செய்யும். அலுவலகத்தில் திட்டமிட்டுச் செயல்பட்டால் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி சேர்க்கும். அனுபவம் மிக்கவர்கள் வார்த்தைகளை அவசியம் கேளுங்கள். பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். வெளியூர் செல்லும் சமயத்தில் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

கன்னி:

சலிக்காமல் உழைத்தால் சாதகங்கள் அதிகரிக்கக் கூடிய வருடம். தேவையற்ற தர்க்கமும் வேண்டாத வாதமும் தவிர்த்தால், நிம்மதி தொடரும். அலுவலகத்தில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பதவி, பொறுப்புகள் மனம்போல் கைகூடும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடிவரும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும்.

துலாம்:

பெருமை அதிகரிக்கும் ஆண்டு. இந்த சமயத்தில் பொறுமையும் கவனமும் இருந்தால், முன்னேற்றமும் தொடர்ச்சியாகும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். தேவையற்ற வாக்குவாதம் எவருடனும் வேண்டாம். பதவி, ஊதியம் உயர்வுகள் தடை நீங்கி நிச்சயம் வரும்.

விருச்சிகம்:

உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வரக்கூடிய வருடம். அலட்சியமும் அவசரமும் தவிர்த்தால், அனைத்திலும் நன்மையே கிட்டும். பணியிடத்தில் உங்கள் பெருமை உயரும். மேலதிகாரிகள் ஆதரவினால் பதவி,ஊதியம் உயரப்பெறுவீர்கள்.

தனுசு:

பொறுப்பு உணர்வுடன் செயல்பட்டால், உயர்வுகள் : நிச்சயம் வரக்கூடிய ஆண்டு. திட்டமிடலும் நேரம் தவறாமையும் உயர்வுகளைத் தொடர்ச்சியாக்கும். அலுவலகத்தில் முயற்சிகளில் முடங்காமல் இருந்தால், அனுகூல சூழல் நிலவும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வு, இடமாற்றம் நிச்சயம் கைகூடும்.

மகரம்:

அல்லல்கள் குறைந்து அனுகூலங்கள் அதிகரிக்கும் ஆண்டு. தேவையற்ற தர்க்கமும் வீண் பிடிவாதமும் தவிர்த்தால் ஏற்றமும் மாற்றமும் தொடரும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகளுடன் கலந்துரையாடும் அளவுக்கு பேசப்படுவீர்கள்.

கும்பம்:

அமைதியாகச் செயல்பட்டால், அனைத்திலும் நன்மைகள் கிட்டும் ஆண்டு. எந்த சமயத்திலும் நிதானமும் திட்டமிடலும் முக்கியம். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். சிலருக்கு தொழில் நிரந்தரமாகி மகிழ்ச்சி சேர்க்கும். பல கால எதிர்பார்ப்புகளான ஊதியம், பதவி உயர்வு கிட்டும். உடனிருப்போருடன் வீண் தர்க்கம் வேண்டாம்.

மீனம்:

எண்ணங்கள் ஈடேறக்கூடிய ஆண்டு. அதேசமயம் எதிலும் நேரடி கவனமும் சோம்பல் இல்லா உழைப்பும் அவசியம். அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ப நன்மைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் தவிருங்கள். பிறரைக் குறைகூறுவது கூடாது. திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்