🚀 ஃபாரினுக்கே டஃப் கொடுக்கும் நம்மூரு கொண்டாட்டம்… தூள் கிளப்பிய தூத்துக்குடி கேரல்ஸ்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5662896 cropped 25122025 162610 picsart 251225 162407730 w 1 3x2 Thedalweb ஃபாரினுக்கே டஃப் கொடுக்கும் நம்மூரு கொண்டாட்டம்... தூள் கிளப்பிய தூத்துக்குடி கேரல்ஸ்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 25, 2025 6:37 PM ISTThoothukudi Carols: கேரல்ஸ் கார்னிவலில் போர்ட், ட்ரோன், நண்டு, ரோபோ, கிறிஸ்துமஸ் தாத்தா உள்ளிட்ட பல்வேறு தீம்களை மையமாகக் கொண்டு வாகனங்கள் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.+ ஃபாரினுக்கே டஃப் கொடுக்கும் நம்மூரு கொண்டாட்டம்..

2
தூள் கிளப்பிய தூத்துக்குடி கேரல்ஸ்…உலகமெங்கும் கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக விமரிசையாக கொண்டாடப்படும்

3
தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, அலங்காரங்கள், வீடுகளில் குடில்கள் அமைப்பது என இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாக நடைபெறும்.ஆனால் தூத்துக்குடியில் பிரம்மாண்டமாக நடைபெறும் கேரல்ஸ் பவனியைக் காண மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து மட்டுமில்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து திரள்வர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அந்த அளவிற்கு தூத்துக்குடி

📌 Last Updated:Dec 25, 2025 6:37 PM ISTThoothukudi Carols: கேரல்ஸ் கார்னிவலில் போர்ட், ட்ரோன், நண்டு, ரோபோ, கிறிஸ்துமஸ் தாத்தா உள்ளிட்ட பல்வேறு தீம்களை மையமாகக் கொண்டு வாகனங்கள் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.+ ஃபாரினுக்கே டஃப் கொடுக்கும்…


Last Updated:

Thoothukudi Carols: கேரல்ஸ் கார்னிவலில் போர்ட், ட்ரோன், நண்டு, ரோபோ, கிறிஸ்துமஸ் தாத்தா உள்ளிட்ட பல்வேறு தீம்களை மையமாகக் கொண்டு வாகனங்கள் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

+

ஃபாரினுக்கே

ஃபாரினுக்கே டஃப் கொடுக்கும் நம்மூரு கொண்டாட்டம்… தூள் கிளப்பிய தூத்துக்குடி கேரல்ஸ்…

உலகமெங்கும் கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக விமரிசையாக கொண்டாடப்படும். தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, அலங்காரங்கள், வீடுகளில் குடில்கள் அமைப்பது என இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாக நடைபெறும்.

ஆனால் தூத்துக்குடியில் பிரம்மாண்டமாக நடைபெறும் கேரல்ஸ் பவனியைக் காண மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து மட்டுமில்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து திரள்வர். அந்த அளவிற்கு தூத்துக்குடி கேரல் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது.

ஆனால் இந்த ஆண்டு கேரல்ஸ் பவனிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக கேரல் வாகனங்கள் வடிவமைப்பிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கேரல்ஸ் பவனியில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் பரபரப்பாக ஏற்பாடுகள் நடந்திருந்தது.

இந்த ஆண்டு கேரல்ஸ் கார்னிவலில் மொத்தம் 9 கேரல்ஸ் வாகனங்கள் பங்கேற்றன. போர்ட், ட்ரோன், நண்டு, ரோபோ, கிறிஸ்துமஸ் தாத்தா உள்ளிட்ட பல்வேறு தீம்களை மையமாகக் கொண்டு வாகனங்கள் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. வண்ண வண்ண விளக்குகளால் ஒளி அலங்காரங்கள் மற்றும் DJ இசை கார்னிவலுக்கு கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்தின.

பொதுமக்கள் பலரும் பார்பி, ஜாக் ஸ்பேரோ, அவெஞ்சர்ஸ் போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து கார்னிவலில் கலந்து கொண்டனர். குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் இசைக்கேற்ப நடனமாடி, உற்சாகமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். வாகன ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகளில் சென்றபோது, இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் பாட்டுப்பாடி நடனமாடி உற்சாகத்தில் திளைத்தனர்.

இந்த கிறிஸ்துமஸ் கார்னிவல் ஊர்வலம் மாலை 7 மணி அளவில் தூத்துக்குடி ஃபையர் சர்வீஸ் சாலையில் தொடங்கி, WGC சாலை வழியாகச் சென்று, நகரின் முக்கிய பகுதிகளைச் சுற்றிவந்து மாதா கோவில் பகுதியில் நிறைவடைந்தது. ஊர்வலம் முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து கலந்து கொண்ட இந்த கிறிஸ்துமஸ் கார்னிவல், மத ஒற்றுமையும் சமூக நல்லிணக்கமும் வெளிப்படும் வகையில் அமைந்தது. DJ இசை, ஒளி அலங்காரங்கள் மற்றும் நடனங்களுக்கிடையே, தூத்துக்குடி மக்கள் கிறிஸ்துமஸ் இரவை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்