✅ புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் லட்ச தீப பெருவிழா!! பால்குடம் எடுத்த பக்தர்கள் | தஞ்சாவூர்

✍️ |
HYP 5663813 cropped 26122025 085337 screenshot 20251225 133558 2 3x2 Thedalweb புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் லட்ச தீப பெருவிழா!! பால்குடம் எடுத்த பக்தர்கள் | தஞ்சாவூர்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 26, 2025 11:58 AM ISTதஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா என்கிற மராட்டிய மன்னரால் கட்டப்பட்டது.+ புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் தஞ்சாவூர் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், 21-ஆம் ஆண்டு மார்கழி மாத லட்ச தீப பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது

2
இவ்விழாவை முன்னிட்டு 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ராஜவீதிகளில் பால்குடம் எடுத்துச் சென்று, மாரியம்மனுக்கு நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்

3
விழாவின்போது கோவில் மற்றும் சுற்றுப்புறங்கள் தீப ஒளியில் ஜொலித்தது.தஞ்சாவூர் அருகே அமைந்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா எனும் மராட்டிய மன்னரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Dec 26, 2025 11:58 AM ISTதஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா என்கிற மராட்டிய மன்னரால் கட்டப்பட்டது.+ புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் தஞ்சாவூர் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற…


Last Updated:

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா என்கிற மராட்டிய மன்னரால் கட்டப்பட்டது.

+

புன்னை

புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் 

தஞ்சாவூர் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், 21-ஆம் ஆண்டு மார்கழி மாத லட்ச தீப பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ராஜவீதிகளில் பால்குடம் எடுத்துச் சென்று, மாரியம்மனுக்கு நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். விழாவின்போது கோவில் மற்றும் சுற்றுப்புறங்கள் தீப ஒளியில் ஜொலித்தது.

தஞ்சாவூர் அருகே அமைந்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா எனும் மராட்டிய மன்னரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. புற்று வடிவில் சுயம்புவாக அம்மன் தோன்றியிருப்பது இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பாகும். சோழ மன்னர்கள் மற்றும் மராட்டிய மன்னர்களின் இஷ்ட தெய்வமாக விளங்கிய இத்தலம், தீராத நோய்களைத் தீர்க்கும் சக்தி கொண்டதாக பக்தர்களால் போற்றப்படுகிறது. குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வேப்பிலை மீது படுத்து விரதமிருந்தால் நோய் குணமாகும் என்பது காலங்காலமாக நிலவி வரும் நம்பிக்கையாகும்.

இந்த நிலையில், ஆண்டுதோறும் அம்மனுக்கு நடைபெறும் பல்வேறு விசேஷ நிகழ்வுகளில் ஒன்றான லட்சத்தீப விளக்கு பெருவிழா இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் நிறைவு நாளான டிசம்பர் 25-ம் தேதி, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 1,508 பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5665012 cropped 26122025 170532 newproject20240731t1428111 1 3x2 Thedalweb உலகப் புகழ் பெற்ற மதுரையின் மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு கோடியே 25 லட்சத்திற்கு உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. | மதுரை

🚀 உலகப் புகழ் பெற்ற மதுரையின் மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு கோடியே 25 லட்சத்திற்கு உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. | மதுரை

📌 அவ்வாறு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், மீனாட்சி அம்மனைத் தரிசனம் செய்த பின்னர் காணிக்கையாக ரூபாய் நோட்டுகள்,…

Guru peyarchi 1 2025 12 cb0228e2c4c34339f5f2a3d56635f421 3x2 Thedalweb Guru Peyarchi | 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு கொட்டப்போகுது அதிர்ஷ்டம்.. உங்க ராசி இருக்கா?

📌 Guru Peyarchi | 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு கொட்டப்போகுது அதிர்ஷ்டம்.. உங்க ராசி இருக்கா?

📌 Guru peyarchi | குருவின் தாக்கம் அனைத்து ராசியினருக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிக நன்மையை…