🚀 மதுரையில் சொர்க்கவாசல் திறப்பு… விண்ணை முட்டிய கோவிந்தா கோவிந்தா முழக்கம்…. | மதுரை

✍️ |
HYP 5672090 cropped 30122025 122331 img20251230wa0005 watermar 2 3x2 Thedalweb மதுரையில் சொர்க்கவாசல் திறப்பு... விண்ணை முட்டிய கோவிந்தா கோவிந்தா முழக்கம்.... | மதுரை
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 30, 2025 1:07 PM ISTஇந்த ஆண்டுக்கான மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு மதுரை அழகர் கோவில் மற்றும் அருள்மிகு பிரசன்னா வெங்கடாஜலபதி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு விண்ணை மட்டும் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் பொதுமக்கள் வழிபட்டனர்

2
+ சொர்க்கவாசல் திறப்புஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி என்பது வைகுண்ட ஏகாதசி  என்று அழைக்கப்படுகின்றது

3
வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோயில்களில் ’சொர்க்கவாசல்’ எனப்படும் ‘பரமபத வாசல்’ , திறக்கப்படும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதனை எடுத்து இந்த ஆண்டிற்கான மார்கழி மாத ஏகாதசியை முன்னிட்டு மதுரையில் உள்ள108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு கள்ளழகர் திருக்ககோவிலில் கடந்த 10 நாட்களாக பகல்பத்து உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியை

📌 Last Updated:Dec 30, 2025 1:07 PM ISTஇந்த ஆண்டுக்கான மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு மதுரை அழகர் கோவில் மற்றும் அருள்மிகு பிரசன்னா வெங்கடாஜலபதி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு விண்ணை மட்டும் கோவிந்தா கோவிந்தா…


Last Updated:

இந்த ஆண்டுக்கான மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு மதுரை அழகர் கோவில் மற்றும் அருள்மிகு பிரசன்னா வெங்கடாஜலபதி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு விண்ணை மட்டும் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் பொதுமக்கள் வழிபட்டனர். 

Rapid Read
+

சொர்க்கவாசல்

சொர்க்கவாசல் திறப்பு

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி என்பது வைகுண்ட ஏகாதசி  என்று அழைக்கப்படுகின்றது. வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோயில்களில் ’சொர்க்கவாசல்’ எனப்படும் ‘பரமபத வாசல்’ , திறக்கப்படும். இதனை எடுத்து இந்த ஆண்டிற்கான மார்கழி மாத ஏகாதசியை முன்னிட்டு மதுரையில் உள்ள

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு கள்ளழகர் திருக்ககோவிலில் கடந்த 10 நாட்களாக பகல்பத்து உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு மேல் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக கோவில் மேளதாளம் முழங்க, கோவில் யானை சுந்தரவல்லி, தீவட்டி, வர்ணகுடை உள்ளிட்ட பரிவாரங்களுடன் வந்த பெருமாளை நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் “கோவிந்தா” கோஷம் முழங்க பெருமாளை வழிபட்டனர். பின்பு பெருமாள் சயன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

அதேபோல், கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் திருஅத்யனம் உற்சவம் எனும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 20ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது.  இந்நிலையில், சிறப்பு நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்கிட  தீவட்டி பரிவாரங்களுடன் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளியதைத் தொடர்ந்து பக்தர்களும் பரமபத வாசல் வழியாக வெளியே வந்து “கோவிந்தா” எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.

இது போக மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்