🚀 நாமக்கல் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு… திரளான பக்தர்கள் தரிசனம்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5672038 cropped 30122025 120211 1767076313498 watermark 30 2 3x2 Thedalweb நாமக்கல் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு... திரளான பக்தர்கள் தரிசனம்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 30, 2025 3:07 PM ISTநாமக்கல் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பில் நாமக்கல்லில் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.+ நாமக்கல் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு..

2
திரளான பக்தர்கள் தரிசனம்…நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் கி.பி.8ஆம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் கட்டப்பட்ட குடவறை கோவிலான அரங்கநாதர் கோவில் உள்ளது

3
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது.முன்னதாக திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்திய பூஜை நடைபெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தொடர்ந்து ஆகம விதிப்படி பூஜை செய்து, பட்டாச்சாரியர்கள் பரமபத வாசல் வழியாகக் கூடையில் ஜடாரியை வைத்து கொண்டுவந்தனர்.

📌 Last Updated:Dec 30, 2025 3:07 PM ISTநாமக்கல் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பில் நாமக்கல்லில் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.+ நாமக்கல் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு……


Last Updated:

நாமக்கல் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பில் நாமக்கல்லில் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

+

நாமக்கல்

நாமக்கல் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு… திரளான பக்தர்கள் தரிசனம்…

நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் கி.பி.8ஆம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் கட்டப்பட்ட குடவறை கோவிலான அரங்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது.

முன்னதாக திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்திய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆகம விதிப்படி பூஜை செய்து, பட்டாச்சாரியர்கள் பரமபத வாசல் வழியாகக் கூடையில் ஜடாரியை வைத்து கொண்டுவந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப்பி, சாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு நாமக்கல்லைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பக்தர்களின் வருகையை முன்னிட்டு நாமக்கல் கடைவீதி சாலை மற்றும் பழைய பேருந்து நிலைய சாலையில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு அவ்வழியாக வரும் வாகனங்கள் கோட்டை சாலை, பூங்கா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்