📌 வைகுண்ட ஏகாதசி 2025 : சொர்க்கவாசல் திறப்பு விழா.. பக்தர்கள் பரவசம்…!! | சேலம்

✍️ |
HYP 5672178 cropped 30122025 125520 inshot 20251230 125039776 1 3x2 Thedalweb வைகுண்ட ஏகாதசி 2025 : சொர்க்கவாசல் திறப்பு விழா.. பக்தர்கள் பரவசம்...!! | சேலம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 30, 2025 4:57 PM ISTவைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெருமாள் திருக்கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.+ எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, 'வைகுண்ட ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது

2
மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு உகந்த மிக முக்கியமான நாளாக இது கருதப்படுகிறது

3
இந்த நாளின் மிக முக்கியமான நிகழ்வு விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு தான்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருப்பதாக ஐதீகம்.அதன்படி, சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெருமாள் திருக்கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது

5
மேலும், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட

📌 Last Updated:Dec 30, 2025 4:57 PM ISTவைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெருமாள் திருக்கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.+ எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள்…


Last Updated:

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெருமாள் திருக்கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

Rapid Read
+

எடப்பாடி

எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, ‘வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு உகந்த மிக முக்கியமான நாளாக இது கருதப்படுகிறது. இந்த நாளின் மிக முக்கியமான நிகழ்வு விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு தான். வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருப்பதாக ஐதீகம்.

அதன்படி, சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெருமாள் திருக்கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் உள்ள மூக்கரை நரசிம்ம பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் நடைபெற்ற யாக வேள்வி பூஜை, கோமாதா பூஜையினை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் மூக்கரை நரசிம்ம பெருமாள், சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் “கோவிந்தா” “கோவிந்தா” கோஷம் முழங்க சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து வாயில் முகப்பு பகுதியில் உள்ள பல்லி உருவத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி மூக்கரை நரசிம்மம் பெருமாள் ஆலய வளாகத்தில், அதிகாலை முதலே பெரும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பழைய எடப்பாடி சென்றாய பெருமாள் திருக்கோவில், மேட்டுதெரு சவுந்தரராஜ பெருமாள் சன்னதி, வெள்ளைக்கரடு மலைக்கோயில் திம்மராய பெருமாள் சன்னதி, பூலாம்பட்டி மலை மாட்டு பெருமாள் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்