🔥 நீலகிரி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு… கடுங்குளிரிலும் குவிந்த மக்கள்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5672378 cropped 30122025 142904 inshot 20251230 142711231 2 3x2 Thedalweb நீலகிரி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு... கடுங்குளிரிலும் குவிந்த மக்கள்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 30, 2025 5:43 PM ISTநீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை நேரம் முதல் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் கோவிந்தா கோவிந்த கோஷங்களுடன் கலந்து கொண்டனர்.+ நீலகிரி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு..

2
கடுங்குளிரிலும் குவிந்த மக்கள்…மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, 'வைகுண்ட ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது

3
மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு உகந்த மிக முக்கியமான நாளாக இந்த தினம் கருதப்படுகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த நாளின் மிக முக்கியமான நிகழ்வு விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு ஆகும்

5
வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறந்திருப்பதாக ஐதீகம்.அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை நேரம் முதல் மக்கள்

📌 Last Updated:Dec 30, 2025 5:43 PM ISTநீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை நேரம் முதல் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் கோவிந்தா கோவிந்த கோஷங்களுடன் கலந்து கொண்டனர்.+ நீலகிரி…


Last Updated:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை நேரம் முதல் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் கோவிந்தா கோவிந்த கோஷங்களுடன் கலந்து கொண்டனர்.

+

நீலகிரி

நீலகிரி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு… கடுங்குளிரிலும் குவிந்த மக்கள்…

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, ‘வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு உகந்த மிக முக்கியமான நாளாக இந்த தினம் கருதப்படுகிறது. இந்த நாளின் மிக முக்கியமான நிகழ்வு விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு ஆகும். வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறந்திருப்பதாக ஐதீகம்.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை நேரம் முதல் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் கோவிந்தா கோவிந்தா கோஷங்களுடன் கலந்து கொண்டனர்.

சொர்க்கவாசல் திறப்பில் ஒரு புறத்தில் நுழைந்து மற்றொரு பாதை வழியாக வெளியில் வரும் பாரம்பரியமான வழிபாட்டு முறைகள் அன்று முதல் இன்று வரையிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. நீலகிரியில் பல்வேறு கிராம பகுதிகளிலும் அதிகாலை நேரங்களில் உறை பனியையும் குளிரையும் பொருட்படுத்தாது நெருப்பு மூட்டி குளிர்காய்ந்த படி கோவில் வளாகங்களில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

மேலும் பெருமாள் குறித்து சிறப்பு பஜனை பாடல்கள் மற்றும் சொர்க்கவாசல் திறப்பு தினத்தில் தெய்வத்திற்காக பல்வேறு வீடுகளிலிருந்தும் படைக்கப்பட்ட பிரசாதம் எடுத்துவரப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்