💡 ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு…3 டன் மலர்களால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்…. | ஆன்மிகம்

✍️ |
HYP 5676076 cropped 01012026 120600 1767249188942 watermark 01 1 3x2 Thedalweb ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு...3 டன் மலர்களால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்.... | ஆன்மிகம்
📌 Last Updated:Jan 01, 2026 12:43 PM ISTஉலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 3 டன் மலர்களால், புஷ்பாஞ்சலி நடைபெற்றது.+ ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு…3 டன் மலர்களால் நாமக்கல்…


Last Updated:

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 3 டன் மலர்களால், புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

ஆங்கில

ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு…3 டன் மலர்களால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்….

நாமக்கல் நகரின் மையமான, கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.

இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள்பாலித்து வருகிறார். தினசரி காலையில் ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இன்று, ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துபடி செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கனகாபிஷேகத்துடன் அபிஷேகம் நிறைவு பெற்றது.

தொடர்ந்து காலை 6:45 மணிக்கு, நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் அபிஷேகக் குழு சார்பில், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, துளசி, முல்லை, மல்லிகை, அரளி, அல்லி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான, சுமார் 3 டன் மலர்கள் சுவாமி மீது கூடை கூடையாகத் தூவப்பட்டு, சிறப்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5676264 cropped 01012026 134529 images1 watermark 01012026 1 3x2 Thedalweb ஆருத்ரா தரிசனத்திற்கு உத்திரகோசமங்கை கோவிலுக்கு போறீங்களா ? போக்குவரத்து மாற்றம் தெரிஞ்சுக்கோங்க

⚡ ஆருத்ரா தரிசனத்திற்கு உத்திரகோசமங்கை கோவிலுக்கு போறீங்களா ? போக்குவரத்து மாற்றம் தெரிஞ்சுக்கோங்க

📌 உத்திரகோசமங்கை மங்களநாதேஷ்வரர் கோவில் மரகத நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வரும் வாகனங்கள்…

Aruthra Darshanam Thiruvadhirai kali 2026 01 f0df5a008bc81057ffa09b6a03764308 3x2 Thedalweb ஆருத்ரா தரிசனத்தில் மட்டும் களி நைவேத்தியம்… சிவபக்தர்கள் தெரிய வேண்டிய ஆன்மீக ரகசியம்...

🚀 ஆருத்ரா தரிசனத்தில் மட்டும் களி நைவேத்தியம்… சிவபக்தர்கள் தெரிய வேண்டிய ஆன்மீக ரகசியம்…

📌 மார்கழி திருவாதிரை நாளன்று ஆருத்ரா தரிசனத்தில் சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக களி படைக்கப்படுகிறது. Source link மார்கழி திருவாதிரை…