💡 சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்! | ஆன்மிகம்

✍️ |
Chidambaram therottam 2026 01 87e7a59146db6a1393e4fded549cf7f3 3x2 Thedalweb சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 02, 2026 11:12 AM ISTAarudhra Darisanam | நாளை 3ஆம் தேதி நடராஜமூர்த்திக்கு மகாஅபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.சிதம்பரம் தேரோட்டம்சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோவில்

2
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம் ஆகிய விழாக்களின் போது, மூலவராகிய நடராஜமூர்த்தி உற்சவராக புறப்பாடாகி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்

3
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அந்த வகையில் இந்தாண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

5
இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக,

📌 Last Updated:Jan 02, 2026 11:12 AM ISTAarudhra Darisanam | நாளை 3ஆம் தேதி நடராஜமூர்த்திக்கு மகாஅபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.சிதம்பரம் தேரோட்டம்சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.பஞ்ச…


Last Updated:

Aarudhra Darisanam | நாளை 3ஆம் தேதி நடராஜமூர்த்திக்கு மகாஅபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

சிதம்பரம் தேரோட்டம்
சிதம்பரம் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம் ஆகிய விழாக்களின் போது, மூலவராகிய நடராஜமூர்த்தி உற்சவராக புறப்பாடாகி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்தாண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஜோடிக்கப்பட்ட ஐந்து தேர்களில் விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், சண்டிகேஸ்வரர், சுவாமிகள் நான்கு மாட வீதிகளான தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது ‘சிவ சிவா கோஷம்’ விண்ணை பிளந்தது. தேரோட்டத்தையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை 3ஆம் தேதி நடராஜமூர்த்திக்கு மகாஅபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது. பின்னர் 4-ஆம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா, 5-ஆம் தேதி இரவு கனகசபை நகரில் உள்ள ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Sukran peyarchi 2026 01 50876fb245455512fe02807ea19f041f 3x2 Thedalweb Sukran peyarchi | சுக்கிரன் பலத்தால் இந்த 6 ராசிகளுக்கு மகிழ்ச்சி வரும்.. 2026-ல் பல ட்விஸ்ட்.. எதிர்பாராத லாபம் கிடைக்குமாம்! | ஆன்மிகம்

🚀 Sukran peyarchi | சுக்கிரன் பலத்தால் இந்த 6 ராசிகளுக்கு மகிழ்ச்சி வரும்.. 2026-ல் பல ட்விஸ்ட்.. எதிர்பாராத லாபம் கிடைக்குமாம்! | ஆன்மிகம்

📌 இன்பம், காதல், காதல் மற்றும் திருமணத்தின் கிரகமான சுக்கிரன், ஜனவரி 12 முதல் மார்ச் இறுதி வரை…

HYP 5677284 cropped 02012026 013139 9107 637902415905086839 wa 2 3x2 Thedalweb கடவுள் தேசத்தில் வாழும் மதுரை மீனாட்சி அம்மன்... 2400 ஆண்டுகளாக நீடிக்கும் ஆன்மிக உறவு...

🔥 கடவுள் தேசத்தில் வாழும் மதுரை மீனாட்சி அம்மன்… 2400 ஆண்டுகளாக நீடிக்கும் ஆன்மிக உறவு…

📌 மலையாள மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் தேவி குலசாமியாக சிறந்து விளங்கும் இந்த சக்தி வாய்ந்த தேவி மற்றும்…

Car Festival 2026 01 bdb63c840d60fd300a189f0fc3ec9619 3x2 Thedalweb ஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி தேரோட்ட திருவிழா கோலாகலம்.. பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து சென்ற பக்தர்கள்! | ஆன்மிகம்

🚀 ஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி தேரோட்ட திருவிழா கோலாகலம்.. பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து சென்ற பக்தர்கள்! | ஆன்மிகம்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Jan 02, 2026 8:06 AM ISTஆவுடையார்கோவிலில் ஆத்மநாத…