🚀 திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்! | ஆன்மிகம்

✍️ |
amitshaah 2026 01 6166aca6cac85b24f91ce6acf4960869 3x2 Thedalweb திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 05, 2026 12:59 PM ISTAmit shah darisanam | அமித்ஷா வருகையால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அமித்ஷா சாமி தரிசனம்திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நேற்று தமிழகம் வந்திருந்தார்

2
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரை பிரசாரத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் அமித்ஷா நேற்று பங்கேற்றார்

3
அதைத்தொடர்ந்து, இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதைத்தொடர்ந்து, மன்னார்புரத்தில் நடைபெறவுள்ள மோடி பொங்கல் விழாவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக

📌 Last Updated:Jan 05, 2026 12:59 PM ISTAmit shah darisanam | அமித்ஷா வருகையால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அமித்ஷா சாமி தரிசனம்திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி…


Last Updated:

Amit shah darisanam | அமித்ஷா வருகையால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமித்ஷா சாமி தரிசனம்
அமித்ஷா சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நேற்று தமிழகம் வந்திருந்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரை பிரசாரத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் அமித்ஷா நேற்று பங்கேற்றார். அதைத்தொடர்ந்து, இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து, மன்னார்புரத்தில் நடைபெறவுள்ள மோடி பொங்கல் விழாவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் 2 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை பள்ளத்திவயல் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசாரப் பயணத்தில் நிறைவு விழாவில் அமித்ஷா பங்கேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சாலை வழியாக திருச்சிக்கு வந்த அமித்ஷா ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். 2 ஆம் நாளான இன்று காலை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, இன்று மாலை மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெற உள்ள “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழாவில் பங்கேற்றார்.

அமித்ஷா வருகையால் பாதுகாப்பு கருதி ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்களும் நீண்ட நேரம் காத்திருந்ததால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்