🔥 ஜெகதளா ஹெத்தையம்மன் கோவில் திருவிழா… ஆடிபாடி குல தெய்வத்தை வழிபட்ட படுகர் இன மக்கள்… | நீலகிரி

✍️ |
HYP 5693214 cropped 09012026 174703 inshot 20260109 173634834 2 3x2 Thedalweb ஜெகதளா ஹெத்தையம்மன் கோவில் திருவிழா... ஆடிபாடி குல தெய்வத்தை வழிபட்ட படுகர் இன மக்கள்... | நீலகிரி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 09, 2026 6:41 PM ISTநீலகிரி மலை மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படும் ஹெத்தை அம்மன் திருவிழாவில் இந்த ஒரு கோவிலில் மட்டுமே புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது+ ஜெகதளா ஹெத்தையம்மன் கோவில் பூக்குண்டம் திருவிழாநீலகிரி மாவட்டத்தில் படுகர் சமுதாய மக்கள் குலதெய்வமாக கொண்டாடும் ஹெத்தை அம்மன் திருவிழா விமர்சையாக நடைபெற்றது

2
கடந்த 50 தினங்களுக்கு முன்னர் விரதம் இருந்து இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.ஹெத்தைக்காரர்கள் அனைத்து கிராமங்களுக்கும் நடந்தே சென்று அந்த கிராமங்களில் அம்மன் அருள்வாக்கு அளித்து திருவிழாவை சிறப்பிக்கின்றனர்

3
அதனைத் தொடர்ந்து ஒரு வார காலம் மடிமனை எனும் இடத்தில் அனைவரும் தங்கி இருந்து கோவிலுக்கு வருபவர்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு சிறப்பான வசதிகளையும் செய்து
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 09, 2026 6:41 PM ISTநீலகிரி மலை மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படும் ஹெத்தை அம்மன் திருவிழாவில் இந்த ஒரு கோவிலில் மட்டுமே புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது+ ஜெகதளா ஹெத்தையம்மன் கோவில்…


Last Updated:

நீலகிரி மலை மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படும் ஹெத்தை அம்மன் திருவிழாவில் இந்த ஒரு கோவிலில் மட்டுமே புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது

+

ஜெகதளா

ஜெகதளா ஹெத்தையம்மன் கோவில் பூக்குண்டம் திருவிழா

நீலகிரி மாவட்டத்தில் படுகர் சமுதாய மக்கள் குலதெய்வமாக கொண்டாடும் ஹெத்தை அம்மன் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த 50 தினங்களுக்கு முன்னர் விரதம் இருந்து இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஹெத்தைக்காரர்கள் அனைத்து கிராமங்களுக்கும் நடந்தே சென்று அந்த கிராமங்களில் அம்மன் அருள்வாக்கு அளித்து திருவிழாவை சிறப்பிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து ஒரு வார காலம் மடிமனை எனும் இடத்தில் அனைவரும் தங்கி இருந்து கோவிலுக்கு வருபவர்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு சிறப்பான வசதிகளையும் செய்து தருகின்றனர்.

இன்றைய தினம் ஜெகதளா மடிமனை என்ற இடத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய தீ குண்டம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கினர். ஹெத்தையம்மன் தீக்குண்டம் திருவிழாவை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் குவிந்ததால் வெள்ளை நிறத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதையும் வாசிக்க: Tobacco Price Hike: வரி உயர்வுக்கு முன்பே தமிழ்நாடு முழுவதும் உயர்ந்த சிகரெட் விலை: என்ன நடந்தது.?

சுமார் 11 பேர் தீக்குண்டம் இறங்கிய பிறகு, அனைவரும் தீ குண்டத்தில் வணங்கி அந்த கறியை நெற்றியில் பூசிக் கொண்டனர். மேலும் வருகைப் புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மலை மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படும் ஹெத்தை அம்மன் திருவிழாவில் இந்த ஒரு கோவிலில் மட்டுமே புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதர கோவில்களில் புகைப்படம் எடுக்கவும் வீடியோ பதிவு செய்யவும் தடை என கோவில் நிர்வாகத்தின் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்