💡 கோலாகலமாக நடந்த ஹெத்தையம்மன் ஊர்வலம்… சாரல் மழையிலும் உற்சாகமாக நடனமாடிய இளைஞர்கள்… | ஆன்மிகம்

✍️ |
HYP 5700586 cropped 13012026 123843 inshot 20260113 123347120 2 2026 01 c79857ac599647735541fc5d317 Thedalweb கோலாகலமாக நடந்த ஹெத்தையம்மன் ஊர்வலம்... சாரல் மழையிலும் உற்சாகமாக நடனமாடிய இளைஞர்கள்... | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 13, 2026 4:58 PM ISTநீலகிரி மாவட்டம் ஜெகதளா கிராமத்தில் நடந்த ஹெத்தையம்மன் திருவிழாவில் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பேண்ட் இசைக்கு நடனமாடி மகிழ்ந்தனர்+ கோலாகலமாக நடந்த ஹெத்தையம்மன் ஊர்வலம்..

2
சாரல் மழையிலும் உற்சாகமாக நடனமாடிய இளைஞர்கள்…நீலகிரி மாவட்டத்தில் சுமார் 300 கிராமங்களுக்கு மேல் படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்

3
இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை குலதெய்வமான ஹெத்தையம்மனை வழிபட்டு சிறப்பான முறையில் திருவிழா கொண்டாடி மகிழ்கின்றனர்.அந்த வகையில் பல்வேறு கிராமங்களிலும் ஒரு வாரகாலம் கொண்டாடப்பட்ட திருவிழா நேற்றைய தினம் இறுதி நாளாக நடைபெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த தினத்தில் பல்வேறு கிராமங்களிலும் திருவிழா களைகட்டியது

5
நீலகிரி மாவட்டத்தில் பேரகனி, பெத்தளா, கூக்கல், சின்ன குன்னூர், எப்பநாடு, ஜெகதளா,

📌 Last Updated:Jan 13, 2026 4:58 PM ISTநீலகிரி மாவட்டம் ஜெகதளா கிராமத்தில் நடந்த ஹெத்தையம்மன் திருவிழாவில் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பேண்ட் இசைக்கு நடனமாடி மகிழ்ந்தனர்+ கோலாகலமாக நடந்த ஹெத்தையம்மன் ஊர்வலம்… சாரல் மழையிலும்…


Last Updated:

நீலகிரி மாவட்டம் ஜெகதளா கிராமத்தில் நடந்த ஹெத்தையம்மன் திருவிழாவில் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பேண்ட் இசைக்கு நடனமாடி மகிழ்ந்தனர்

+

கோலாகலமாக

கோலாகலமாக நடந்த ஹெத்தையம்மன் ஊர்வலம்… சாரல் மழையிலும் உற்சாகமாக நடனமாடிய இளைஞர்கள்…

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 300 கிராமங்களுக்கு மேல் படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை குலதெய்வமான ஹெத்தையம்மனை வழிபட்டு சிறப்பான முறையில் திருவிழா கொண்டாடி மகிழ்கின்றனர்.

அந்த வகையில் பல்வேறு கிராமங்களிலும் ஒரு வாரகாலம் கொண்டாடப்பட்ட திருவிழா நேற்றைய தினம் இறுதி நாளாக நடைபெற்றது. இந்த தினத்தில் பல்வேறு கிராமங்களிலும் திருவிழா களைகட்டியது. நீலகிரி மாவட்டத்தில் பேரகனி, பெத்தளா, கூக்கல், சின்ன குன்னூர், எப்பநாடு, ஜெகதளா, கெந்தொரை மற்றும் பல்வேறு கிராமங்களிலும் ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து ஹெத்தைகாரர்கள் செங்கோல் ஏந்தி முன்னர் வலம் வர பூசாரி ஹெத்தையம்மனை தலையில் சுமந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். பாரம்பரிய பலவண்ண குடைகள் அணிவகுக்க மக்கள் கூட்டம் அலைமோத அம்மன் அழைப்பு களைகட்டியது.

மேலும் இரவு 8 மணியளவில் தேர் பவனி ஜெகதளா கிராமத்தில் துவங்கியது. இரவு நேரத்தில் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பேண்ட் இசைக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்