📌 Magara jothi | இன்று மாலை மகர ஜோதி தரிசனம்.. இவ்வளவு சிறப்புகள் இருக்கா? | ஆன்மிகம்

✍️ |
Sabarimalai 2026 01 664b3cd8e76d77c9b42719d5cf1de767 3x2 Thedalweb Magara jothi | இன்று மாலை மகர ஜோதி தரிசனம்.. இவ்வளவு சிறப்புகள் இருக்கா? | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 14, 2026 8:11 AM ISTSabarimalai | சபரிமலை பொன்னம்பலமேடு பகுதியில் மகர ஜோதி தரிசனம் தை 1ம் தேதி நடைபெறும்

2
இதற்கான காரணமும், சிறப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.சபரிமலைமகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய மாதத்தை தமிழில் தை மாதம் என பின்பற்றுகிறோம்

3
தமிழகத்தில் தை மாதத்தில் பல பண்டிகளை கொண்டாடப்படுவது வழக்கம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
குறிப்பாக தை மாத முதல் நாளுக்கு முன் போகி பண்டிகையும், தை 1 அன்று தைப் பொங்கல், 2ம் நாள் மாட்டுப் பொங்கல் 3ம் நாள் காணும் பொங்கல் என மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறதுதை 1ம் தேதி பொங்கல் பண்டிகையைத் தவிர, சபரிமலை ஐயப்பன் கோயில், பொன்னம்பலமேடு பகுதியில் தெரியும் மகர ஜோதி

📌 Last Updated:Jan 14, 2026 8:11 AM ISTSabarimalai | சபரிமலை பொன்னம்பலமேடு பகுதியில் மகர ஜோதி தரிசனம் தை 1ம் தேதி நடைபெறும். இதற்கான காரணமும், சிறப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.சபரிமலைமகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய மாதத்தை…


Last Updated:

Sabarimalai | சபரிமலை பொன்னம்பலமேடு பகுதியில் மகர ஜோதி தரிசனம் தை 1ம் தேதி நடைபெறும். இதற்கான காரணமும், சிறப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.

சபரிமலை
சபரிமலை

மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய மாதத்தை தமிழில் தை மாதம் என பின்பற்றுகிறோம். தமிழகத்தில் தை மாதத்தில் பல பண்டிகளை கொண்டாடப்படுவது வழக்கம் . குறிப்பாக தை மாத முதல் நாளுக்கு முன் போகி பண்டிகையும், தை 1 அன்று தைப் பொங்கல், 2ம் நாள் மாட்டுப் பொங்கல் 3ம் நாள் காணும் பொங்கல் என மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது

தை 1ம் தேதி பொங்கல் பண்டிகையைத் தவிர, சபரிமலை ஐயப்பன் கோயில், பொன்னம்பலமேடு பகுதியில் தெரியும் மகர ஜோதி தரிசனம் மிகவும் விசேஷ நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை 1ம் தேதி (ஜனவரி 14) அன்று, கேரளாவில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படும் மகர ஜோதியைப் பார்க்க ஐயப்ப பக்தர்கள் குவிவது வழக்கம்.

மகர ஜோதி தெய்வீக நிகழ்வு என நம்பப்பட்ட நிலையில், அது கொச்சுபம்பா எனும் ஊர் அருகில் இருக்கும் பொன்னம்பலமேடு மலைப்பகுதியில் மனிதர்களால் ஏற்றப்படும் கற்பூரங்களால் கொளுத்தப்படும் தீபமே என்று திருவாங்கூர் தேவசம்போர்டு உறுதி அளித்துள்ளது குறிபிடத்தக்கது.

இந்நிலையில் 2025ஆம் ஆண்டின் மகர ஜோதி தரிசனம் இன்று மாலை நடைபெறவுள்ளது. இதை பார்த்தால் கோடி புண்ணியம் என்பது ஐதீகம். அந்த வகையில், சபரிமலையில் தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஐயப்பன், ஆண்டுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

புலிப் பால் வேண்டி காட்டிற்கு சென்ற மணிகண்டன், அங்கு மனிதர்களை துன்புறுத்தி வந்த மகிஷி அரக்கியை அம்பு எய்து வீழ்த்தினான். தன்னை வீழ்த்தியது கண்டிப்பாக சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த ஒருவராகதான் இருக்கும் என்பதை உணர்ந்த மகிஷி, மறு உருவம் பெற்று எழுந்தாள். பின்பு, மணிகண்டனை வணங்கி தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டினாள். ஆனால் மணிகண்டன், இந்த அவதாரத்தில் தான் பிரம்மச்சாரியாக வாழப்போவதாகவும், எனவே தனது இடது பக்கத்தில் சிறு தூரத்தில் நிலைக்கொள்ளும்படி செய்தார். அவளே ‘மஞ்சமாதா’ என்று அழைக்கப்படுகிறாள்.

புலியின் மீது அமர்ந்தபடி பந்தள நாட்டு அரண்மனைக்கு திரும்பினார் ஐயப்பன். இதைப் பார்த்து வியந்த அனைவரும் பயபக்தியில் வணங்கி நின்றனர். மன்னன், ஐயப்பன் தெய்வ பிறவி என்பதை உணர்ந்தான். ஐயப்பன், தான் சபரிமலையில் ஒரு அம்பை எய்வதாகவும், அந்த அம்பு எந்த இடத்தில் விழுகிறதோ அங்கே ஒரு கோவில் கட்டும்படியும் அருளினார்.

அதன்படி பந்தள நாட்டு மன்னன், சபரிமலையில் ஐயப்பன் கோவிலை கட்டினான். மகரசங்கராந்தி நாளில், பரசுராமர் உதவியுடன் கோவில் திறக்கப்பட்டது. மகரசங்கராந்தி நாளில், விரதம் இருந்து இருமுடி கட்டி தன்னை காண வரும் பக்தர்களுக்கு ஐயப்பன் ஜோதி வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Shani Eclipse 2026 03 c1ec868476237d99b99a23637efe0e43 1200x675 Thedalweb Sani Blessings | சந்திர கிரகணத்தன்று சனியின் அருள்.. கோடீஸ்வரராகும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Sani Blessings | சந்திர கிரகணத்தன்று சனியின் அருள்.. கோடீஸ்வரராகும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ராகுவும் கேதுவும் பாம்புகளைப் போலவே நிழல் கிரகங்களாகக் கருதப்படுகிறார்கள், அவற்றின்…

Vinayagar 6 2026 03 b4e8e0841e9105fa028c32ed1cc4b794 1200x675 Thedalweb Today Rasi Palan | சந்திரகிரகண நாளில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் இவைதான்.. இன்றைய ராசிபலன்.. மார்ச் 3, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 Today Rasi Palan | சந்திரகிரகண நாளில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் இவைதான்.. இன்றைய ராசிபலன்.. மார்ச் 3, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிம்மம்சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான நாள்…