🔥 பெரிய கோவில் மாட்டுப்பொங்கல்… 2000 ஆயிரம் கிலோ உணவுப் பொருட்களால் நந்திக்கு அலங்காரம் ! | தஞ்சாவூர்

✍️ |
HYP 5708474 cropped 17012026 093923 inshot 20260117 093854514 1 3x2 Thedalweb பெரிய கோவில் மாட்டுப்பொங்கல்... 2000 ஆயிரம் கிலோ உணவுப் பொருட்களால் நந்திக்கு அலங்காரம் ! | தஞ்சாவூர்
📌 Last Updated:Jan 17, 2026 11:51 AM ISTதஞ்சை பெரிய கோயிலில் உள்ள 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்டமான மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்பட்டன.+ தஞ்சை பெரிய கோவில்…


Last Updated:

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்டமான மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்பட்டன.

Rapid Read
+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

தஞ்சை

தஞ்சை பெரிய கோவில் மாட்டுப்பொங்கல் விழா 

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில், தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோயிலில் உள்ள 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்டமான மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்பட்டன.

இந்த ஆண்டு, மகா நந்திக்கு லட்டு, ஜாங்கிரி, ஜிலேபி, மைசூர்பாகு, அதிரசம் உள்ளிட்ட பல்வேறு இனிப்பு வகைகளும், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட பல வகையான காய்கறிகளும் என மொத்தம் 2,000 கிலோ (2 டன்) எடையிலான உணவுப் பொருட்களால் மிகப்பிரம்மாண்டமான முறையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வண்ணமயமான இந்த அலங்காரத்தைக் காணப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கோ-பூஜை எனப்படும் பசு வழிபாடும் சிறப்பாக நடைபெற்றது. கோயிலின் நந்தி மண்டபத்திற்கு முன்பாக 108 பசுக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு, அவற்றுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் மகா நந்திக்கும், பசுக்களுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்